ETV Bharat / state

தொடர் விபத்து - வேகத்தடை அமைக்கக்கோரி தாசம்பாளையம் மக்கள் மறியல்! - erode news

தாசம்பாளையம் பகுதியில் தொடர்ந்து விபத்துகள் நடப்பதால் அப்பகுதியில் வேகத்தடை அமைக்கக்கோரி 100-க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர் விபத்து காரணமாக வேகத்தடை அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

author img

By

Published : Nov 23, 2022, 7:57 PM IST

ஈரோடு: புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள தாசம்பாளையத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் உள்ள பவானிசாகர் சாலை வழியாக செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதாகவும், வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த வேகத்தடை அமைக்க பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று தாசம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி நடந்து சென்ற நல்லம்மாள் என்ற மூதாட்டி உயிரிழந்தார். இதனால் ஆவேசம் அடைந்த அப்பகுதி மக்கள் பவானிசாகர் சாலையில் உடனடியாக இரண்டு வேகத்தடை அமைக்கக்கோரி, இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சாலை மறியல் காரணமாக பேருந்து, லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் வரிசை கட்டி நின்றன. தகவல் அறிந்து வந்த புஞ்சைபுளியம்பட்டி போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கலைந்துசெல்ல மறுத்தனர்.

இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசி வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும்; அதுவரை தற்காலிகமான இப்பகுதியில் பேரிகார்டு வைக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதன் காரணமாக புஞ்சை புளியம்பட்டி பவானிசாகர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தொடர் விபத்து காரணமாக வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

இதையும் படிங்க: தர்பங்கா - எர்ணாகுளம் ரயில் சேலம், ஈரோடு, கோவையில் நின்று செல்லும்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.