ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கொண்டையம்பாளையம் பகுதியில் நேற்று பலத்த சூறைக் காற்று வீசியதோடு, மழையும் பெய்தது. இதில் காற்றின் வேகம் தாங்காமல் அப்பகுதியில் உள்ள மரங்கள் முறிந்து விழுந்தன. ஒரு வீட்டின் மேற்கூரை ஓடுகள் காற்றில் பறந்தன. மேலும், காவிலிபாளையம் குளத்துக்கு நீர்வரத் தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்தக் கிராமத்தில் கருப்பராயன் கோயில் வளாகத்தில் சின்னண்ணன், பெரியண்ணன் என்ற இரண்டு சாமி சிலைகள் வைக்கப்பட்டு அவற்றை காவல் தெய்வங்களாக மக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று வீசிய பலத்த சூறைக்காற்றினால் ஒரு சாமி சிலையின் தலை தனியாக உடைந்து கீழே விழுந்தது. இதனை அறிந்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.