ETV Bharat / state

சாதூர்யமாக செயல்பட்ட ஓட்டுநர்; பலர் உயிர் தப்பினர் - செயல்பட்ட

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே மாரடைப்பு ஏற்பட்ட பேருந்து ஓட்டுநர் சாதூர்யமாக செயல்பட்டு பயணிகளின் உயிரை காப்பாற்றிய சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

பேருந்து
author img

By

Published : Apr 19, 2019, 10:25 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் இருந்து கோடிபுரத்துக்கு தலமலை வழியாக அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. கோடிபுரத்தில் அந்த பேருந்தை ஓட்டியவரான தங்கராஜுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பேருந்தை சாலையோரம் சற்று ஓரமாக நிறுத்தி பயணிகள் 15 பேரையும் தங்கராஜ் கீழே இறக்கிவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து நடத்துநர் செல்வம், அவ்வழியாக சென்ற காரில் ஓட்டுநர் தங்கராஜை ஏற்றிக்கொண்டு தாளவாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு அவரை பரிசோதித்தபோது மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது பயணிகளை பாதுகாப்பாக இறக்கிவிட்ட ஓட்டுநரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

எஸ்ஒய்19பஸ்: தலமலை அருகே சாலையோரம் ஓட்டுநர் தங்கராஜ் நிறுத்தி அரசுப் பேருந்து

பேருந்து சென்றுக்கொண்டிருந்தபோது ஓட்டுநருக்கு மாரடைப்பு: சாலையோரம் நிறுத்தி பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர்  

TN_ERD_SATHY_02_19_BUS_DRIVER_PHOTO_TN10009  

தலமலை அருகே அரசு பேருந்து ஓட்டுநர் தங்கராஜூக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் உடனடியாக பேருந்தை சாலையோரம் நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டார். அதனைத் தொடர்ந்து அவ்வழியாக வந்த  காரில் ஏறி தாளவாடி அரசு பேருந்து மருத்துவமையில் சிகிச்சை பெற்றார்.

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் இருந்து கோடிபுரத்துக்கு தலமலை வழியாக அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநர் தங்கராஜ் ஓட்டினார். பேருந்தில் நடத்துனர் செல்வம் இருந்தார். கோடிபுரத்தில் 15 பயணிகளை ஏற்றிக்கொண்டு தலமலை நோக்கி பேருந்து வந்துகொண்டிருந்தது. அப்போது தலமலை அருகே ஓட்டுநர் தங்கராஜூக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் பேருந்தை சற்று ஓரமாக நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டார். அதனைத் தொடர்ந்து நடத்துநர் செல்வம், அவ்வழியாக சென்ற காரில் ஓட்டுநர் தங்கராஜை ஏற்றிக்கொண்டு தாளவாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்தபோது மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது பயணிகளை பாதுகாப்பாக இறக்கிவிட்ட ஓட்டுநரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். 

TN_ERD_SATHY_02_19_BUS_DRIVER_PHOTO_TN10009
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.