ETV Bharat / state

'பெரியார் ஒரு மின்சாரம் தொட்டால் ஷாக்கடிக்கும்' - கி.வீரமணி - நீட் தேர்வை பெரியார் கண்ணாடி கொண்டு பார்க்க வேண்டும்

ஈரோடு: பெரியார் ஒரு மின்சாரம் அது தெரியாமல் சிலர் கை வைக்கின்றனர் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

k.veeramani
k.veeramani
author img

By

Published : Jan 24, 2020, 10:34 AM IST

நீட் தேர்விற்கு எதிராக பரப்புரை மேற்கொண்டு வரும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ஈரோடு சூரம்பட்டி நான்கு சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், 'நீட் தேர்வின் பாதிப்பு தெரிய வேண்டுமானால் பெரியாரின் கண்ணாடி அணிய வேண்டும். நீட் தேர்வு அரசியல் சட்டத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. மாநில உரிமைகளைப் பறிக்கும் செயல். தமிழ்நாட்டில் 21 ஆண்டுகளாக இருந்த நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது திமுக ஆட்சியில் தான். பெரியார் ஒரு மின்சாரம் அது தெரியாமல் சிலர் கை வைக்கின்றனர். மின்சாரம் வெளிச்சமும் தரும் ஷாக்கும் அடிக்கும்' என்றார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'இம்மண்ணில்தான் குலக் கல்வியை எதிர்த்து தந்தை பெரியார் சூளுரைத்தார். அதேபோல் தற்போது நீட் மற்றும் 5, 8ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வை ரத்து செய்வதற்கான போராட்டத்தில் சர்வபலி தியாகம் செய்வதற்கு தயாராக உள்ளோம்' என்று தெரிவித்தார்.

மேலும், நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசியது தொடர்பான கேள்விக்கு, நீதிமன்றத்தில் தீர்வு காண்போம் என்றார்.

இதையும் படிங்க: ரஜினியிடம் மோதுனா தோத்துடுவீங்க - ஸ்டாலினுக்கு கராத்தே அட்வைஸ்

Intro:ஈரோடு ஆனந்த்
ஜன23

நீட் தேர்வின் பாதிப்பை பெரியார் கண்ணாடி கொண்டு பார்க்க வேண்டும் - கி.வீரமணி!

நீட் தேர்வின் பாதிப்பு தெரிய வேண்டுமானால் பெரியார் கண்ணாடியில் பார்க்க வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.

நீட் தேர்விற்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஈரோடு சூரம்பட்டி நான்கு சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அப்போது பேசிய அவர் நீட் தேர்வின் பாதிப்பு தெரிய வேண்டுமானால் பெரியாரின் கண்ணாடி அணிய வேண்டும் என்றார். மேலும் நீட் தேர்வு அரசியல் சட்டத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது.மாநில உரிமைகளை பறிக்கும் செயல்.தமிழகத்தில் 21 ஆண்டுகளாக இருந்த நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டது தி.மு.க ஆட்சியில் தான் என்றார்.

பெரியார் ஒரு மின்சாரம் அது தெரியாமல் சிலர் கை வைக்கின்றனர். மின்சாரம் வெளிச்சமும் தரும் ஷாக்கும் அடிக்கும் என்றார். நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மக்களை திரட்டி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் ஒரு ஆண்டு விலக்கு பெறப்பட்ட நிலையில் தற்போது அம்மா ஆட்சி என்று சொல்பவர்களால் ஏன் முடியவில்லை என்றார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கி.வீரமணி பெரியார் மண்ணில்தான் குலகல்வியை எதிர்த்து தந்தை பெரியார் சூளுரைத்தார்.Body:அதேபோல் தற்போது நீட் மற்றும் 5, 8 வகுப்புகளுக்கு பொதுதேர்வை ரத்து செய்வதற்கான போராட்டத்தில் சர்வபலி தியாகம் செய்வதற்கு தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

Conclusion:நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசியது தொடர்பான கேள்விக்கு நீதிமன்றத்தில் தீர்வு காண போவதாகவும் தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.