ETV Bharat / state

ஊழலுக்கு பிறந்த கட்சி திமுக - அமைச்சர் கருப்பணன் விமர்சனம்! - அமைச்சர் கருப்பணன் குற்றச்சாட்டு

ஈரோடு: ஊழக்கு என்றே பிறந்த கட்சி திமுக என சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் விமர்சித்துள்ளார்.

அமைச்சர் கே.சி. கருப்பணன் செய்தியாளர்ச் சந்திப்பு
அமைச்சர் கே.சி. கருப்பணன் செய்தியாளர்ச் சந்திப்பு
author img

By

Published : Dec 25, 2019, 7:18 PM IST

ஈரோடு மாவட்டம் பவானி, அந்தியூர் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் திறந்த வேன் மூலமாகவும், வீதி வீதியாக சென்றும் மக்களை சந்தித்து பரப்புரை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’இந்த தேர்தல் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் உண்மையான நேரடி போட்டி. தமிழ்நாட்டில் தனியார்வசமிருந்த கேபிள் ஒளிப்பரப்பு உரிமையை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அரசுடைமையாக்கினார். திமுக தங்களது ஆட்சிக்காலத்தில் மக்களை ஏமாளிகளாக்கி அவர்களது குடும்பத்தினர் பணக்காரர்களாக ஆவதற்கு துணைபோனார்கள். ஊழல் செய்வதற்கு என்றே பிறந்த கட்சி திமுக. ஸ்டாலின் பொய் பேசுவதற்கே பிறந்தவ’ என்றார்.

இதையும் படிங்க...நாடு சந்திக்கும் சுகாதாரத் துறை பிரச்னைகள்.!

Intro:ஈரோடு ஆனந்த்
டிச25

இது திமுகவுக்கும் அதிமுகவுக்கும் நேரடி போட்டி : அமைச்சர் கருப்பணன்!

உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்குள் பிரச்சனைகள் தொடர்கிறது என்றும் இந்த தேர்தல் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் உண்மையான நேரடிப் போட்டியென்றும் தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் அந்தியூர் பகுதிகளில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் திறந்த வேன் மூலமாகவும், வீதி வீதியாக சென்றும் மக்களைச் சந்தித்து அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக வாக்குகளைச் சேகரித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறுகையில், தமிழகத்தில் தனியார்வசமிருந்த கேபிள் ஒளிப்பரப்பு உரிமையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசுடைமையாக்கினார் என்றும், திமுக தங்களது ஆட்சிக்காலத்தில் மக்களை ஏமாளிகளாக்கி அவர்களது குடும்பத்தினர் பணக்காரர்களாவதற்கு துணை போனதாகவும் தெரிவித்தார்.

மேலும் உள்ளாட்சித் தேர்தலில் கடந்த இடைத் தேர்தலைப் போலவே மக்கள் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க தயாராக இருப்பதாகவும், ஈரோடு மாவட்டம் மற்றும் புறநகர் மாவட்டங்களில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளதாகவும், பவானி மற்றும் அந்தியூர் வறட்சிப் பகுதிகளுக்கான நீர் நிலைத் திட்டங்களும் வருகிற நிதிநிலை அறிக்கையில் முதல்வர் அறிவிக்கவுள்ளதாகவும் கூறினார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், நெல்லுக்கான ஆதார விலையை தமிழக முதல்வர் அறிவிப்பார் என்றும், ஈரோடு மாவட்ட புறநகர் மாவட்டங்களில் திமுகவினர் தங்களது தோல்வி முன்னரே தெரிந்ததாலும், திமுக கூட்டணிக்குள் நிலவும் பிரச்சனைகள் காரணமாகவும் தேர்தல் பிரச்சாரத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கும், திமுகவிற்கும்தான் போட்டியென்றார்.

Body:குடியுரிமைச் சட்டத்தைப் பொறுத்தவரை தமிழகத்தில் சிறுபான்மையினர் பாதிக்கப்படாமல் சட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தீவிரவாததிற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்து நிற்கும் என்றும் தமிழக முதல்வர் உறுதியளித்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Conclusion:அதிமுக வாக்காளர்களுக்கு பண பரிவர்த்தனை செய்கிறது என்று தொடர்ந்து திமுக தலைவர்தான் பொய்யாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

பேட்டி கே.சி.கருப்பணன் –தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.