ஈரோடு மாமன்றத்தின் அவசர கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் நாகரத்தினம் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும், பேசிய 6வது வார்டு திமுக கவுன்சிலர் ஆதி, தனது வார்டில் எந்த பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என அடுக்கடுக்காக குற்றம் சாட்டினார். இதனால் அவருக்கும் மேயர், துணைமேயருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
நிதி இல்லாததால் அனைத்து வார்டுகளிலும் முக்கிய பணிகளை செய்து வருவதாக மேயர் விளக்கமளித்தார். இதனை ஏற்காமல் தொடர்ந்து கவுன்சிலர் வாக்குவாதம் செய்து கொண்டிருந்த்தால் ஆவேசமடைந்த மேயர், தனது இருக்கையில் இருந்து எழுந்து கவுன்சிலர் இருக்கைக்கு சென்று அவரது குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து சமாதானப்படுத்தினார். மற்ற கவுன்சிலர்களும் சமாதானப்படுத்தினர்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், மாநகராட்சியில் ஒப்பந்த பணிகளை தனியாருக்கு விடும் தமிழ்நாடு அரசின் அரசாணையை எதிர்த்து தீர்மானம் கொண்டு வர கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். இதற்காக அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதாக அறிவித்து வெளியேற முயன்றனர். இதனையடுத்து மேயர், துணை மேயர் உட்பட அனைத்து கவுன்சிலர்களின் ஆதரவுடன் அரசாணைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க: தேவர் குருபூஜை: செல்வாக்கை ஓபிஎஸ் நிரூபித்தாரா? ஈபிஎஸ் ஏன் பசும்பொன்னிற்கு செல்லவில்லை?