ETV Bharat / state

வெளியில் இருந்து அதிக விலைக்கு ஏன் மின்சாரம் வாங்க வேண்டும்? - அண்ணாமலை - ஈரோடு மாவட்ட செய்திகள்

தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு இல்லை என கூறும அமைச்சர் செந்தில்பாலாஜி, வெளியில் இருந்து அதிக விலைக்கு ஏன் மின்சாரம் வாங்க வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

'திமுக ஆட்சிக்கு வந்தால் காவலருக்கு திண்டாட்டம் தான்'

author img

By

Published : Oct 21, 2021, 10:50 PM IST

ஈரோடு: சேலம், கோவை உள்ளிட்ட 6 மாவட்ட பாஜக உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங் தலைமையில் நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் வானதி சீனிவாசன், சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "இந்தியாவில் இதுவரை 100 கோடியே 40 லட்சம் கரோனோ தடுப்பூசி போடப்படப்பட்டுள்ளது. மருத்துவர்களின் கடின உழைப்பால் தான் 100 கோடி தடுப்பூசி போட முடிந்தது. தடுப்பூசி கொண்டு வந்ததன் மூலம் பிரதமர் பல உயிர்களை காப்பாற்றியுள்ளார்.

செந்தில்பாலாஜியை, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் என திமுகவின் எல்லா தலைவர்களாலும் குற்றம்சாட்டப்பட்டவர். தமிழ்நாட்டில் செயற்கையாக மின் பற்றாக்குறையை ஏற்படுத்தி, வெளியில் அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்குகின்றனர். மின் தட்டுப்பாடு இல்லை என சொன்ன செந்தில்பாலாஜி, ஏன் 20 ரூபாய்ருக்கு வெளியிலிருந்து மின்சாரத்தை வாங்க வேண்டும்.

'திமுக ஆட்சிக்கு வந்தால் காவலருக்கு திண்டாட்டம் தான்'

லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் செந்தில்பாலாஜி வீட்டில் சோதனை நடத்தினால் ஆவணங்கள் கிடைக்கும். கோவை , திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொழில் அதிபர்களை செந்தில் பாலாஜி மிரட்டி வருகிறார்" என்றார்.

இதையும் படிங்க: விவாகரத்து கிடைக்காத விரக்தி - மனைவிக்கு மாப்பிள்ளை பார்த்த கணவன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.