ETV Bharat / state

திமுக ஊர்வலத்தில் பங்கேற்ற அதிமுக எம்எல்ஏ - dmk anbazhagan Peace Procession erode

ஈரோடு: திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவையொட்டி நடைபெற்ற அமைதி ஊர்வலத்தில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் தென்னரசு கலந்துகொண்டார்.

dmk-anbazhagan
dmk-anbazhagan
author img

By

Published : Mar 8, 2020, 1:11 PM IST

திமுக மூத்தத் தலைவரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான பேராசிரியர் க. அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (மார்ச் 07) காலமானார். அதனையொட்டி தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் இரங்கல் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதன்படி ஈரோடு மாவட்ட திமுக சார்பில் பேருந்து நிலையம் அருகே அமைதி ஊர்வலம் நடைபெற்றது. அதில், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் தென்னரசு கலந்துகொண்டு அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

க. அன்பழகன் படத்திற்கு அதிமுக எம்எல்ஏ மரியாதை

அதன்பின் அமைதி ஊர்வலத்தில், திமுக மாநகர செயலாளர் சுப்பிரமணியன், பெரியார் நகர்ப் பகுதி கழக செயலாளர் மனோகரன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, மதிமுக மாவட்ட செயலாளர் முருகன், முன்னாள் துணை மேயர் பாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் ரகுராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: இனமானப் பேராசிரியர் அன்பழகனின் புகைப்படத் தொகுப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.