இந்தியாவில் கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கு மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்ட நிலையில் தேவையின்றி தெருவில் திரிவோர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துவருகிறது. இந்நிலையில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ள வருவாய் சுகாதாரத்துறையினர் சத்தியமங்கலம் நகர்ப்பகுதியில் மக்கள் அத்தியாவசியமின்றி திரியும் வாகன ஓட்டிகள் குறித்தும் அவர்கள் மீது செய்யப்பட்ட வழக்குகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து பண்ணாரிச்சோதனைச்சாவடிக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் கதிரவன், காவலர்களிடம் காய்கறி, பால் வாகனங்கள் வருகை குறித்து கேட்டறிந்தார். மேலும் அங்குள்ள பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு முகாமிற்கு சென்று கிருமிநாசினி இருப்பு, வாகனங்கள் மீது கிருமி தெளிப்பு ஆவணங்களை பார்வையிட்டார். அப்போது ஆட்சியர் கையில் கிருமிநாசினி தெளித்து, அனைவரும் அடிக்கடி கை கழுவி பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: உணவின்றி தவித்த இலங்கை அகதிகள் - உணவு பொருட்களை வழங்கிய சு.வெங்கடேசன்!