ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் மலைப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ராஜன்நகர் துணைமின்நிலையத்திலிருந்து திம்பம் மலைப்பாதை வழியாக மின்சாரம் கொண்டு செல்லப்பட்டு மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. இந்நிலையில் திம்பம் மலைப்பாதை 27ஆவது கொண்டைஊசி வளைவு அருகே சாலையோரம் இருந்த மின்கம்பம் எதிர்பாராவிதமாக முறிந்து விழுந்ததால் மின்கம்பிகள் அறுந்து சாலையில் கிடந்தன.
இதனால் திம்பம் மலைப்பாதையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று சாலையில் கிடந்த மின்கம்பம் மற்றும் கம்பிகளை அகற்றிய பின் போக்குவரத்து சீரானது. மின்கம்பம் முறிந்ததால் ஆசனூர் மலை கிராமங்களில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது.
இதையும் படிக்கலாமே: திருவள்ளூரில் மழையின் தாக்கத்தால் சரிந்து விழுந்த மின்கம்பங்கள்!