ஈரோடு: சத்தியமங்கலம் அருகே புதுவடவள்ளி பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் மோகன்ராஜ் தலைமையில் காவலர்கள் அப்பகுதியில் நேற்று (ஜூலை 24) ரோந்துப் பணி மேற்கொண்டனர்.
சாராய ஊறல் அழிப்பு
அப்போது அட்டமொக்கைப் பகுதியில் சுப்பிரமணித் தோட்டம் அருகே ஒரு நபர் நாட்டுத்துப்பாக்கியுடன் சுற்றி திரிந்ததைக்கண்ட காவலர்கள், அந்நபரை பிடித்து விசாரித்ததில், அதே ஊரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஜான் பீட்டர் (30) என்பதும், அப்பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக பிளாஸ்டிக் ட்ரம்களில் சாராய ஊறல் போட்டு வைத்திருந்ததும் தெரியவந்தது.
மேலும், வனப்பகுதியில் உள்ள வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.
![கூலித்தொழிலாளியிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-erd-01-sathy-gun-arrest-photo-tn10009_25072021083514_2507f_1627182314_669.jpg)
நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்
இதையடுத்து அவரிடமிருந்த நாட்டுத்துப்பாக்கியைப் பறிமுதல் செய்து, 75 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
பின்னர் காவலர்கள் ஜான் பீட்டர் மீது வழக்குப்பதிந்து சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 'பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் படுகாயம்- குடிபோதை காரணமா?'