ETV Bharat / state

ஸ்ரீ அருட்கரிய காளியம்மன் கோயிலில் தீ குண்டம் திருவிழா - பக்தர்கள் வழிபாடு! - Erode News Today

கோரகாட்டூர் அருள்மிகு அருட்கரிய காளியம்மன் குண்டம் தேர் திருவிழாவில் ஏராளமான பகத்தர்கள் தீ குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.

தீ குண்டம்
தீ குண்டம்
author img

By

Published : Feb 2, 2023, 3:42 PM IST

ஸ்ரீ அருட்கரிய காளியம்மன் கோயிலில் தீ குண்டம் திருவிழா

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அடுத்த கோரக்காட்டூர் அருள்மிகு ஸ்ரீ அருட்கரிய காளியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. வருடந்தோறும் தை மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் இந்த குண்டம் தேர் திருவிழாவில், பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மக்கள் 15 நாட்கள் விரதம் இருந்து குண்டம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான குண்டம் தேர் திருவிழா கடந்த 18ஆம் தேதி பூச்சாட்டுகளுடன் தொடங்கியது. தொடர்ந்து தீர்த்தம் கொண்டு வருதல், முதல் கால பூஜை, காப்பு கட்டுதல், கொடியேற்றம், சந்தன காப்பு, சுமங்கலி யாக பூஜை, உள்ளிட்டு பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றன.

நேற்று(பிப்.1) இரவு மாடு கரும்பு கொண்டு வருதல், மாவிளக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து கரும்பு, விறகுகள் கொண்டு குண்டம் திறப்பு விழா செய்யப்பட்டு குண்டத்திற்கு தீ முட்டப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று (பிப்.2) நடைபெற்றது.

இதனையொட்டி இன்று(பிப்.2) அதிகாலை அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. குதிரையிடம் வாக்கு கேட்ட பின்பு திருகோடி ஏற்றப்பட்டு குண்டத்திற்கான பூஜைகள் நடத்தப்பட்டது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து கோரக்காட்டூர், கடுக்காயம்பாளையம், கொளத்துப்பாளையம், புளியகாட்டூர், ஐய்யம்புதூர், வெள்ளாங்கோவில் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆண்கள், பெண்கள் சிறுவர்கள் என திரளான மக்கள், 15 நாட்கள் விரதம் இருந்து கையில் வேப்பிலையுடனும், அக்னி சட்டியுடன் குண்டம் இறங்கி தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.