கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை தமிழ்நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகக் கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரத்துக்கும் கீழ் வருமானம் வரும் சிறிய கோயில்களை மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயில் கரோனா அச்சுறுத்தல் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டு மக்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
இக்கோயிலுக்கு ஆண்டுதோறும் அமாவாசையை முன்னிட்டு லட்சணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். ஆவணி அமாவாசையை முன்னிட்டு இன்று(ஆகஸ்ட் 18) சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்திலிருந்து சாமி தரிசனம் செய்யப் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர்.
ஆனால் இந்தாண்டு கரோனாவால் கோயில் மூடப்பட்டதால் பக்தர்கள் கோயில் நுழைவு வாயில் முன்பு கற்பூரம் ஏற்றி வழிப்பட்டனர். பக்தர்கள் கூட்டம் அதிகமானதால் கோவில் நிர்வாகிகள் பக்தர்களைச் தகுந்த இடைவெளி விட்டுச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பு நடவடிக்கை: ஜோதிமணி எம்.பி., ஆய்வு!