தமிழ்நாடு - கர்நாடகா எல்லையில், ராமபுரம் என்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையின் தமிழ் எல்லை அறிவிப்பு பலகையை, கன்னட சலுவளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அவரது ஆதரவாளர்களுடன் கடந்த 10ஆம் தேதி சேதப்படுத்தினார்.
இதையடுத்து, ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, சத்தியமங்கலம் டிஎஸ்பி சுப்பையா, நில அளவை அலுவலர்கள் ஆகியோர் ராமபுரத்தில் மாநில எல்லை அளவீடு செய்து, சம்பவம் நடந்த இடம் கர்நாடக எல்லைக்குள் இருப்பதை உறுதி செய்தனர். அதே போல், எத்திகட்டை பகுதியில் உள்ள தமிழ்நாடு அறிவிப்பு பலகையையும் கன்னட அமைப்பினரால் சேதப்படுத்தப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு - கர்நாடகா எல்லை பகுதியான ராமபுரம், பாரதிபுரம், கும்பாரகுண்டி, எத்திகட்டை, அருள்வாடி, ஆகிய பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையினர் எல்லையை அளவீடு செய்து நெடுஞ்சாலை அறிவிப்பு பலகை அனைத்தும் தமிழ் எல்லை பகுதியிலேயே வைக்கப்பட்டது.