வறுமையில் வாழ்ந்து வரும் மக்களுக்கு மத்திய மாநில அரசுகள் வேலை வழங்க வேண்டும் எனக் கேட்டு, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பேரூராட்சி அலுவலகங்களில் மனு கொடுக்கும் இயக்கம் தொடர்ச்சியாக நடத்துவது என அச்சங்கம் முடிவு செய்துள்ளது.
அதன்படி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர், 200க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள், நூறு நாள் வேலை கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது பேரூராட்சி பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் பயனடைய, 100 நாள் வேலை உறுதித்திட்டத்தை பேரூராட்சிகளுக்கும் வழங்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர். தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ்குமாரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
இதையும் படிங்க : கண்மாய்கள் ஆக்கிரமிப்பு: காவல் துறை வழக்குப் பதியாதது ஏன்?