ETV Bharat / state

தண்ணீரில் தத்தளித்த புள்ளிமானை மீட்ட விவசாயிகள்...! - சத்யமங்கலம் செய்திகள்

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே வனப்பகுதியிலிருந்து வழி தவறி வந்த புள்ளிமான் தண்ணீர் தொட்டியில் விழுந்து தத்தளித்துள்ளது. இதைக் கண்ட விவசாயிகள் மானை மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

deer rescue in sathyamangalam
author img

By

Published : Aug 23, 2019, 4:42 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர் நால்ரோடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பழனிசாமி. இவரது தோட்டத்தில் 20 அடி அளவில் தண்ணீர் தொட்டி உள்ளது. இவர் இன்று காலை தனது விவசாய தோட்டத்தில் உள்ள தண்ணீர் தொட்டி பகுதிக்கு சென்றபோது தொட்டியில் புள்ளிமான் ஒன்று தவறி விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்ததைக் கண்டார்.

தண்ணீரில் தத்தளித்த புள்ளிமானை மீட்ட விவசாயிகள்

இதுகுறித்து உடனடியாக சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு பழனிசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த விவசாயிகள் தொட்டியில் இறங்கி தத்தளித்த புள்ளிமானை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து, விளாமுண்டி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் அறிவுரையின் பேரில் புள்ளிமானை அருகில் உள்ள சீரங்கராயன் வனப்பகுதியில் விட்டனர்.

Intro:Body:tn_erd_01_sathy_deer_rescue_vis_tn10009

சத்தியமங்கலம் அருகே வனப்பகுதியிலிருந்து வழி தவறி வந்து தண்ணீர் தொட்டியில் விழுந்து தத்தளித்த புள்ளிமானை விவசாயிகள் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர் அருகே உள்ள நால்ரோடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பழனிச்சாமி. இவரது தோட்டத்தில் 20 க்கு 20 அடி அளவில் தண்ணீர் தொட்டி உள்ளது. இவர் இன்று காலை தனது விவசாய தோட்டத்தில் உள்ள தண்ணீர் தொட்டி பகுதிக்கு சென்றபோது தண்ணீர் தொட்டியில் புள்ளிமான் ஒன்று தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்தக்கொண்டிருந்ததை கண்டார். இதுகுறித்து உடனடியாக சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த விவசாயிகள் தண்ணீர் தொட்டியில் இறங்கி தத்தளித்த புள்ளிமானை பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து விளா முண்டி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் வனத்துறையினர் அறிவுரையின் பேரில் புள்ளிமானை பத்திரமாக அருகே உள்ள சீரங்கராயன் கரடு வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். வனப்பகுதியில் மான் அவிழ்த்து விட்டதும் துள்ளி குதித்து வனப்பகுதியில் ஓடி மறைந்தது. மானை விவசாயிகள் உயிருடன் பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டதால் விவசாயிகளை வனத்துறையினர் பாராட்டினர் Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.