அரசு பேருந்தில் ஆபத்தான பயணம்: ஊசலாடும் பயணிகளின் உயிர் - ஊசலாடும் பயணிகளின் உயிர்
சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் மலைப் பகுதிக்கு செல்லும் அரசு பேருந்தில் பேருந்தின் மேற்கூரை மற்றும் பின்பக்க ஏணியில் பொதுமக்கள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலை பகுதியில் 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் மலைப் பகுதிக்கு சில அரசு பேருந்துகளும் ஒரு தனியார் பேருந்தும் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் பேருந்து இயக்கப்படுவதால் ஒரு சில நாட்களில் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து கடம்பூர் மலைப்பகுதிக்கு செல்லும் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் மிகவும் அதிகமாக இருப்பது வழக்கம்.
இந்நிலையில், சத்தியமங்கலத்திலிருந்து கடம்பூர் மலைப்பகுதிக்கு சென்ற அரசு பேருந்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் ஏறியதால் சிலர் பேருந்தின் பின்புறம் உள்ள ஏணி, மேற்கூரையில் பயணித்துள்ளனர். இதனை பதிவு செய்த வாகன ஓட்டிகள் சமூக வலைதளங்களில் பகிரவே அது வைரலாகியுள்ளது.
இது போக்குவரத்து துறை அலுவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடம்பூர் மலைப்பகுதியில் மேலும் சில பேருந்துகளை இயக்கினால் அசம்பாவிதங்களைத் தவிர்க்கலாம் என சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.4.57 லட்சம் பணம் பறிமுதல்