கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. சுகாதாரத் துறை, உள்ளாட்சி அமைப்புகள் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர். இதன் ஒருபகுதியாக, ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு கை கழுவுவது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
அப்போது, அதே நகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணிபுரியும் ஆறுமுகம் என்பவர் கை கழுவும் விதத்தினை நடனமாடியபடி செய்துகாட்டினார். தற்போது, இக்காணொலி வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.
இதையும் படிங்க: பூக்களை குட்டையில் கொட்டிய விவசாயிகள்