ஈரோடு: கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோயில் அருகே பரிகார பூஜைகள் செய்வதற்காகபல தனியார் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கடலூர் மாவட்டம், சிறுநெசலூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பழனிமுத்து, மகுடேஸ்வரர் திருக்கோயிலில் பரிகார பூஜை செய்வதற்காக பாப்பாத்தி பரிகார மையத்திற்கு சென்றுள்ளார்.
பூஜைக்கு மறுப்பு
பட்டியலின வகுப்பைச் சே்ரந்த பழனிமுத்துவுக்கு பரிகார பூஜை மைய உரிமையாளர் பாஸ்கரன் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதில் பரிகார பூஜை மைய உரிமையாளர் பாஸ்கரன், தனது நண்பர்கள் ஆறு பேருடன் சேர்ந்து பழனிமுத்துவை சாதியின் பெயரை சொல்லி அவரின் ஆடைகளை களைந்து தாக்கியதாக கூறப்படுகிறது.
காவல் நிலையத்தில் புகார்
இதுதொடர்பாக கொடுமுடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சாதிக் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பழனிமுத்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் தலை தூக்கும் சாதி மோதல்: சென்னையில் பிரபல ரவுடி கைது