ETV Bharat / state

ஈரோட்டில் பெய்த கனமழையால் பயிர்கள் சேதம்! - ஈரோட்டில் பெய்த கனமழையால் பயிர்கள் சேதம்

ஈரோடு: கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் வெள்ள நீர் சூழ்ந்து நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன.

crops were damaged due to Erode Heavy rains
author img

By

Published : Oct 13, 2019, 1:05 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று இரவு ஐந்து மணிநேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் நகராட்சியின் மையப்பகுதியில் செல்லும் கீரிப்பள்ளம் ஓடை, தடப்பள்ளி வாய்க்கால் ஆகியவற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த மழைநீர் நேரடியாக சென்று தடப்பள்ளி வாய்க்கால் பாசனப் பகுதியில் உள்ள விளைநிலங்களில் புகுந்ததால், அங்கு பயிரிடப்பட்டுள்ள நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை வெள்ள நீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோட்டில் பெய்த கனமழையால் பயிர்கள் சேதம்

நடவு முடிந்து ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை வெள்ள நீர் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதாகவும்; தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். வெள்ளநீர் வடிந்த பிறகே சேதமதிப்பு தெரியவரும் எனவும், சுமார் ஒரு கோடி மதிப்பிலான சாகுபடி பயிர்கள் சேதமடைந்திருக்கலாம் எனவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், ஒவ்வொரு முறையும் கோபிச்செட்டிபாளையம் பகுதியில் கனமழை பெய்யும் போது கீரிப்பள்ளம் ஓடையிலிருந்து வெளியேறும் மழைநீர், நேரடியாக தடப்பள்ளி வாய்க்காலில் கலப்பதால் பாதிப்பு ஏற்படுவதாகவும், ஓடையிலிருந்து வரும் மழைநீரை மாற்றம் செய்ய வழிவகை செய்யவேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:நெல் பயிர் மழையில் நனைந்தது: நஷ்டத்தை சந்தித்த விவசாயிகள்!

Intro:Body:tn_erd_01_sathy_valai_damages_vis_tn10009

கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையினால் கீரிப்பள்ளம் தடப்பள்ளி வாய்கால்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் வெள்ள நீர் சூழ்ந்து நெல் வாழை கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளது. பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோயிலிலும் வெள்ள நீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டது..

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று இரவு ஐந்து மணிநேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் நகராட்சியின் மையப்பகுதியில் செல்லும் கீரிப்பள்ளம் ஓடை தடப்பள்ளி வாய்க்கால் ஆகியவற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை வெள்ளநீர் நேரடியாக சென்று தடப்பள்ளி வாய்க்கால் பாசன பகுதியில் உள்ள விளைநிலங்களில் புகுந்ததால் அங்கு பயிரிடப்பட்டுள்ள நெல் வாழை கரும்பு உள்ளிட்ட பயிர்களை வெள்ள நீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் வளாகத்திலும் வெள்ளநீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தடப்பள்ளி பாசன வாய்க்காலில் ஏற்பட்ட வெள்ளம் கரைகளை தாண்டி வயல்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது. நடவு முடிந்து ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல் வாழை கரும்பு உள்ளிட்ட பயிர்களை வெள்ள நீர் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதாகவும் தமிழக அரசு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என்றும் கோரிக்கைவைத்துள்ளனர். மேலும் ஒவ்வொரு முறையும் கோபிசெட்டிபாளையம் பகுதியில் கனமழை பெய்யும் போது கீரிப்பள்ளம் ஓடையில் ஏற்படும் மழைவெள்ளம் நேரடியாக தடப்பள்ளி வாய்காலில் கலப்பதால் இவ்வாறு பாதிப்பு ஏற்படுகிறது என்றும் கீரிப்பள்ளம் ஓடையிலிருந்து வரும் தண்ணீரை மாற்றம் செய்ய வழிவகை செய்யவேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கைவைத்துள்ளனர். தற்போது ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர்களில் பயிரிடப்பட்டிருந்த நெல் வாழை கரும்பு மஞ்சள் உள்ளிட்ட பயிர்கள் கடும் சேதமடைந்துள்ளதாகவும் வெள்ளநீர் வடிந்தால் தான் சேதமதிப்பு தெரியவரும் எனறும் சுமார் ஒரு கோடி மதிப்பிலான சாகுபடி பயிர்கள் சேதமடைந்திருக்கலாம் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கோபிசெட்டிபாளையம் தாலுக்காவில் நேற்று இரவு அதிகபட்சமாக 134 மி.மீரும் நம்பியூர் தாலுக்காவில் 120 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.