ETV Bharat / state

வெடிபொருளைக் கடித்த பசுவுக்கு நேர்ந்த கதி! - cow

ஈரோடு: வெடிபொருளைக் கடித்த பசுவுக்கு பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து, அதன் உரிமையாளர், வன விலங்குகளை வேட்டையாட வெடிபொருட்கள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளார்.

பசு மாடு
author img

By

Published : May 15, 2019, 1:26 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காளியூர் வனப்பகுதியில் மான், காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகளை வேட்டையாடும் நோக்கில் அவை இரை தேடிவரும் பாதையில் வெடிபொருட்களை வைக்கின்றனர்.

இந்நிலையில், அதே பகுதியில் வசித்துவரும் அமாவாசை என்ற விவசாயியின் பசு காளியூர் வனப்பகுதியில் மேய்ச்சலுக்குச் சென்றுள்ளது. அப்போது வனவிலங்குகளுக்கு வைக்கப்படும் வெடிபொருளைக் கடித்துள்ளது. இதையடுத்து, சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் வெடிபொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் அந்த பசுவின் வாயில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர், அதற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது குறித்து பேசிய விவசாயி அமாவாசை, ‘காளியூர் வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட சமூக விரோதிகள் வெடிபொருட்களை வைக்கின்றனர். இதனால், வாயில்லா ஜீவன்கள் கொடூரமான முறையில் பாதிக்கப்படுகின்றன. தற்போது எனது வாழ்வாதாரத்தையே இழந்து நிற்கின்றேன். இது போன்று வனவிலங்குகளை வேட்டையாடும் நோக்கில் வெடிபொருட்கள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வேண்டுகோள்விடுத்தார்.

காட்டுப்பன்றி வைத்த ்நாட்டுவெடிகுண்டை  தின்றதால்  வாய் சிதைந்த பசுமாடு பாதிப்பு

;டி.சாம்ராஜ்,
செய்தியாளர்
சத்தியமங்கலம்
94438 96939, 88257 02216 

TN_ERD_SATHY_02_15_COW_INJURY_VIS_TN10009
(Visual  FTP இல் உள்ளது)

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காளியூர் வனத்தையொட்டி உள்ள பகுதிகளில் சமூக விரோதிகளால் வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்தும் வாய் வெடி மருந்தில் சிக்கி அம்மாசை என்ற விவசாயின் பசுமாடு பெரும்காயமடைந்துள்ளது. இது போல் பல மாடுகள் வாய் வெடியில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் வெடி வைக்கும் சமூக விரோத கும்பலை வனத்துறையினர் கைது செய்யவேண்டும் என்றும் உயிரிழந்துள்ள பசுமாடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் இப்பகுதி விவசாயிகள் கோரிக்கைவைத்துள்ளனர்…
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் வனசரகத்துக்குட்பட்ட பகுதிகளில் வன விலங்குகளை வேட்டையாட சமூகவிரோத கும்பல்கள் வாய் வெடி என்றும் வெடிகுண்டை பயன்படுத்தி மான் காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடி வருகின்றனர். இந்த வெடி மருந்தை வனத்தையொட்டியுள்ள பகுதிகளில் வைத்தால் அதை கடிக்கும் வனவிலங்குகள் வெடியில் சிக்கி உயிரிழப்பு ஏற்படுகிறது. அதனால் இந்த வெடியை அதிகளவு பயன்படுத்தி சமூக விரோ கும்பல் வனவிலங்குகளை வேட்டியாடிவருகின்றனர். இந்நிலையில் டி.என.பாளையம் வனசரகத்துக்குட்பட்ட காளியூர் பகுதியில் வனத்தையொட்டியுள்ள தனது தோட்டத்தில் அம்மாசை என்ற விவசாயி கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுவருகிறார். அவரது கால்நடைகளை வனப்பகுதியை ஒட்டியுள்ள நிலத்தில் மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில்  மேய்ச்சலுக்கு கொண்டு சென்ற பசுமாடு அங்கு சமூக விரோத கும்பலால் வன விலங்குகளை வேட்டையாட வைத்திருந்த வாய் வெடி என்றும் வெடிமருந்தை கடித்ததால் வாய் மற்றும் முகம் முழுவதும் சிதைந்து பெரும் பாதிப்படைந்தது. இதை பார்த்து அதிர்சியடைந்த விவசாயி அம்மாசை அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அழைந்து சிகிச்சை அளிக்க முற்பட்டார். ஆனால் மாட்டிற்கு சிகிச்சை அளித்து பயன்இல்லை என்று மருத்துவர் கூறியதால் மிகவும் வேதனையடைந்துள்ளார். மேலும் இது போன்று இப்பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் மற்றும் நாய்கள் இந்த வெடியில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் இந்த சமூக விரோத கும்பலை வனத்துறையினர் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றும் உயிரிழந்துள்ள கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் இப்பகுதி விவசாயிகள் கோரிக்கைவைத்துள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பாதுகாக்கப்படவேண்டிய வனப்பகுதியில் இதுபோன்று வனவிலங்குகளை வேட்டையாடும் சமூக விரோத கும்பல் அதிகளவு வனவிலங்குகளை வேட்டையாடி வருவது வேதனை அளிப்பதாகவும் இதை வனத்துறையினர் உனடியாக தடுத்து நிறுத்தவேண்டும் வேட்டை கும்பலை கைது செய்ய வேண்டும் என்றும் வன உயிரின பாதுகாப்பு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.