கரோனா ஆச்சுறுத்தல் காரணமாக மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், சுற்றுலாத் தலங்கள், வாரச்சந்தைகள், பல்பொருள் அங்காடிகள், திரையரங்குகள் மூடப்பட்டன. இந்நிலையில் மக்கள் அதிகம் கூடும் இடமான வாரச்சந்தைகளும் தற்போது தடைசெய்யப்படும் என்ற வதந்தி பரவியது.
இதனையடுத்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வாரச்சந்தையில் மக்கள் அதிகளவு வருகைதந்து காய்கறிகளை வாங்கத் தொடங்கினர். இதன் காரணமாக கடந்த சில நாள்களாக ஒரு கிலோ ரூ.5-க்கு விற்கப்பட்ட தக்காளி, தற்போது ரூ.15 ஆகவும், கிலோ ரூ.30-க்கு விற்கப்பட்ட வெங்காயம் தற்போது ரூ.50-க்கும் விற்பனையாகின்றன.
அதே சமயம் வாரச்சந்தையில் விற்கப்படும் வளையல்களைப் பெண்கள் அணிவதற்கு முன்பாக அவர்களது கைகளில் சோப்புபோட்டு கழுவி சுத்தம்செய்த பின்னரே, வளையல் போட அனுமதித்தனர். கரோனா அச்சுறுத்தல் காரணமாக விளைப்பொருள்களின் விலை சற்று உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு முட்டை விலை கடும் வீழ்ச்சி!