ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள குண்டேரிப்பள்ளம் அணை பகுதியைச் சேர்ந்தவர் ராமசந்திரன். இவர் தனது வீட்டில் 8 மாடுகள் வளர்த்து விவசாயம் செய்துவருகிறார்.
இதில் ஒரு பசு மாடு சினையாக இருந்தது. இந்நிலையில் அந்த பசுமாடு ஒரே நேரத்தில் 2 பெண் கன்று குட்டிகளை ஈன்றது. சாதாரணமாக பசு மாடுகள் ஒரு கன்றுக்குட்டி தான் போடும். ஆனால் இந்தப் பசுமாடு 2 கன்றுக்குட்டிகள் ஈன்றது அதிசயமாக பார்க்கப்படுகிறது.
அதிலும் இரண்டும் பசு கன்று என்பதால் பசுவின் உரிமையாளர் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: பசுவிற்கும் பன்றிக்குமான பாசப் பிணைப்பு