ETV Bharat / state

’இஞ்சி, பூண்டுதான் பூச்சிக்கொல்லி... மாட்டுச் சாணம், கோமியம்தான் உரம்’ - இயற்கை விவசாயம் செய்து பிரமிக்க வைக்கும் தம்பதி! - organic farming

செயற்கை உரங்களால் மண்ணை மலடாக்க விரும்பாமல் ஈரோட்டைச் சேர்ந்த தம்பதியினர் இயற்கை விவசாயம் செய்துவருகின்றனர். கத்தரிக்காயில் தொடங்கி செங்கீரை வரை பல வகையான பயிர்களைப் பயிரிட்டு இயற்கையான முறையில் பராமரிக்கும் இத்தம்பதியினர், புழு, பூச்சிகளைக் கூட மருந்திட்டுக் கொல்வதில்லை...

இயற்கை விவசாயம் செய்து பிரமிக்க வைக்கும் தம்பதி

author img

By

Published : Jul 14, 2020, 7:28 PM IST

அனைத்தையும் நவீனப்படுத்தும் தொழில்நுட்ப யுகத்தில் விவசாயமும் விதிவிலக்கில்லை. செயற்கை உரங்கள், அதிக மகசூலுக்கான துரித பயிரிடுதல் முறை என பல்வேறு மாற்றங்கள் விவசாயத்தில் புகுத்தப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் சிலர் எந்த விதைக்கு எப்படி பயிரிட வேண்டும் என்பதுகூட புரியாமல் அல்லல்படும் கதைகளும் இந்தியாவில் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன.

இந்த அவசர கதியும், அதிக உற்பத்தி மோகமும் விளையும் நிலத்தில் தொடங்கி விளையும் பொருள்கள் வரையில் அனைத்தையும் நஞ்சாக மாற்றியுள்ளது. இதை வாங்கி உண்ணுவதற்கு முன்பாக பலமுறை கழிவி செயற்கைப் பூச்சிக்கொல்லி மருந்துகளையும், உரங்களின் நெடியையும் போக்க வேண்டியுள்ளது. ஆனாலும்கூட மருத்துவமனைகள் நோக்கி ஓட வைக்கும் வீரியம், நவீன யுக காய்கறிகளுக்குக் கைவந்த கலையாகிப் போனது.

ஆனால், ஈரோடு அருகே உள்ள மாமரத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோபால்-பூங்கொடி தம்பதியின் நிலத்தில் விளையும் காய்கறிகள் அப்படியானதல்ல. இங்கு விளையும் காய்கறிகள் மீது நீர் பாய்ச்சும்போது தெறிக்கும் மண் மட்டுமே படிந்திருக்கும், செயற்கை உரங்கள் அல்ல. காய்கறிகளைப் பார்க்கவே பச்சையாக உண்ணத் தோன்றும் அளவுக்குச் சுகாதாரமாக உள்ளது.

காய்கறிகள்
காய்கறிகள்

கோபால் மாடுகளை அவிழ்த்து தனி இடத்தில் கட்டிவைக்கிறார். அங்கு மாட்டின் கோமியம் சேமிக்க தனியாகக் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோபால், பூங்கொடி தம்பதியினருக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் விவசாய நிலத்தில் முழுக்க இயற்கை முறையில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. வீட்டைச் சுற்றி பச்சை பசேல் என காட்சியளிக்கும் இந்தத் தோட்டம், முழுக்க முழுக்க கால்நடை, காய்கறி, கீரை, மரங்கள் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது. என்னென்ன அறுவடை செய்கிறார்கள், எப்படி அறுவடை செய்கிறார்கள் என அவர்களிடமே கேட்டோம்.

“எங்கள் நிலத்தில் கிணற்று பாசனம்தாங்க. இப்போது வெண்டைக்காய், புடலங்காய், கத்தரிக்காய், பரங்கிக்காய், பாகற்காய், அவரைக்காய், சின்ன வெங்காயம், பீர்க்கங்காய் ஆகிய காய்கறிகளையும், நாட்டு கொத்தமல்லி, செங்கீரை, பாலக்கீரை உள்ளிட்ட கீரை வகைகளையும் பயிரிட்டுள்ளோம். ஒரு துளி ரசாயன உரமும்கூட எங்கள் நிலத்தில் கிடையாது. எங்கள் வீட்டில் நாட்டு மாடுகள் வளர்க்கிறோம். அதைத்தான் உரமாகவும் பயன்படுத்துகிறோம்” என ரத்தினச் சுருக்கமாகச் சொல்லிமுடிக்கிறார், கோபால்.

இயற்கை விவசாயம் செய்து பிரமிக்க வைக்கும் தம்பதி

அவரை இடைமறித்து, ”ஏனுங்.. அதை மட்டும் சொன்னா எப்படி? உரமாக என்னென்ன போடுறோம்னு சொல்லனும்ல” என பேச்சைத் தொடங்குகிறார் கோபாலின் மனைவி பூங்கொடி. அவர் கூறுகையில், “நாட்டு மாட்டின் கோமியம், மாட்டுச் சாணம், நாட்டுச் சர்க்கரை, கொள்ளு மாவு, வரப்பு மண் ஆகியவை கொண்ட ஜீவாமிர்த கரைசலைத் தண்ணீரில் 48 மணி நேரமாக ஊற வைப்போம். பிறகு அதனை கிணற்றிலிருந்து செலுத்தப்படும் சொட்டு நீர்ப் பாசனம் மூலமாகப் பயிர்களுக்கு உரமாக அளிக்கிறோம். காய்கறிகள், கீரை வகைகளை விஷப் பூச்சிகள் தாக்கினால் இஞ்சி, பூண்டு ஆகிய இரண்டையும் கலந்து, தெளிப்பான் மூலமாக பூச்சிகளைக் குறைக்கிறோம்” என்றார்.

குறிப்பாக, விளை நிலங்களை நம்பி வாழும் புழு, பூச்சிகளைக் கொல்ல பூச்சிக்கொல்லி எதையும் பயன்படுத்தவில்லை. கம்பு, சோளம் உள்ளிட்ட தானியங்களை உணவாக அளித்து நாட்டுக் கோழி வளர்ப்பிலும் அதிகம் ஆர்வம் காட்டிவருகின்றனர், இத்தம்பதியினர். பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவது, களை எடுப்பது, பயிர்களைப் பாதுகாப்பது, காய்கறிகள், கீரைகளை அறுவடை செய்வது என உழவுப் பணிகளை இவர்கள் இருவருமே செய்துவருகின்றனர்.

இயற்கை முறையில் விளைந்த இந்தக் காய்கறிகளுக்கு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இயற்கையான முறையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை விற்பனை செய்யும் நிலையங்களுக்கு இந்தக் காய்கறிகளைக் கோபால் நேரடியாகக் கொண்டுசேர்க்கிறார். தனக்குப் போக 40க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான காய்கறிகளை விற்பதாகவும் கோபால் தெரிவிக்கிறார்.

“அதிக விளைச்சலில் கவனம் செலுத்தி செயற்கையான உரங்களைப் பயன்படுத்தி லாபம் பார்ப்பதில் எங்களுக்கு விருப்பமில்லை. குறைந்த விளைச்சலில் ஆரோக்கியமான சுவையான காய்கறிகளை அளிப்பதே மனதுக்குத் திருப்தி அளிக்கிறது” என்கிறார் கோபால்.

இயற்கை விளைப்பொருள்களின் விற்பனை குறித்து இயற்கை விளைப்பொருள்கள் அங்காடி விற்பனையாளர்களிடம் கேட்கும்போது, “செயற்கை உரங்களைத் தவிர்த்து சிறுதானியங்கள், காய்கறிகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளை நாங்கள் ஊக்குவிக்கிறோம். அவர்களின் விளைப்பொருள்களை வாங்கி விற்பனைக்கு வைக்கும்போது, ஆரம்பக் கட்டத்தில் போதிய விற்பனை இல்லை. ஆனால், தற்போது மக்கள் கொஞ்சம் விழிப்புணர்வு கொண்டுள்ளார்கள். விலை சற்று அதிகமானலும் ஆரோக்கியம் முக்கியம் என்ற பார்வை உருவாகியுள்ளது.

பொதுமக்களின் தேவைக்கு ஏற்பவே பொருள்களைக் கொள்முதல் செய்கிறோம். இயற்கை விவசாயம் செய்யும் சிறு விவசாயிகளிடம் அதிகம் கொள்முதல் செய்கிறோம். நாளடைவில் இந்த விளைப்பொருள்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரிக்கும் பட்சத்தில், இந்த விவசாயத்தில் பெரும்பாலோனோர் கவனம் செலுத்தலாம்” என்றனர்.

இதையும் படிங்க: "தற்சார்பு வாய்ச்சொல் அல்ல வாழ்க்கை" - அசத்தும் 'மா' சாகுபடி விவசாயி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.