ETV Bharat / state

தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட கணவன் - மனைவியும் தற்கொலைக்கு முயன்ற சோகம்

ஈரோடு: குடும்ப தகராறு காரணமாக கணவன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதால், அவரது மனைவியும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

couple-suicide-attempt-in-erode
couple-suicide-attempt-in-erode
author img

By

Published : Oct 20, 2020, 11:31 AM IST

ஈரோடு மாவட்டம் ராசாம்பாளையம் மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சுதாகர். அவருக்கு லட்சுமி என்ற மனைவியும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் சுதாகர்-லட்சுமி இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

அதேபோல, நேற்று நள்ளிரவும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் மன உளைச்சல் அடைந்த சுதாகர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அதனை கண்ட லட்சுமி தானும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதுகுறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த போலீசார் லட்சுமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சுதாகரின் உடல் உடற்கூராய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து காவல் துறை விசாரணை நடத்திவருகிறது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல..

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ கீழே உள்ள 24 மணி நேர தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு மையம் - 044- 2464 0050, மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104

இதையும் படிங்க: மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.