ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பவானி சாகர், புஞ்சை புளியம்பட்டி, காவிலிபாளையம், பெரியூர், உக்கரம், அரசூர், கெம்பநாயக்கன் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பருத்தி பயிரிட்டுள்ளனர்.
செடியிலிருந்து பறிக்கப்பட்ட பருத்திப் பஞ்சினை சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்திற்குக் கொண்டுவந்து ஏல முறையில் விற்பனை செய்துவருகின்றனர்.
ஏலத்திற்கு ஆறாயிரம் மூட்டை பருத்தியை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்தனர். பருத்தியை ஏலம் எடுக்க கோவை, அன்னூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.
இதில் ஒரு கிலோ பருத்தி ரூ.57.60 முதல் ரூ.62.80 வரை ஏலம் போனது. மொத்தம் ஆறாயிரம் மூட்டை பருத்தி ரூ.1.10 கோடிக்கு விற்பனையானதாகக் கூட்டுறவுச் சங்க அலுவலர்கள் தெரிவித்தனர்.