இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம், “ஈரோடு மாவட்டம் பெருந்துறை மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையில் கரோனா அறிகுறிகளுடன்
அனுமதிக்கப்பட்ட 81 பேர்களில் 6 பேருக்கு கரோனோ பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள்.
மற்ற மூன்று பேர் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள். இதுமட்டுமின்றி 75 பேர்களின் ரத்த மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு அனுப்பப்ப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், நண்பர்கள் என ஐந்து ஆயிரத்து 400 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு தேவையான காய்கறிகள், அரிசி, பருப்பு உள்ளிட்ட வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவைகள் வழங்க அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்துவருகிறது.
காய்கறிகள், மளிகைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் அவற்றை அதிக விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோடு பேருந்து நிலையத்தில் காய்கறிகள் சந்தை செயல்பட்டுவருகிறது.
அந்தச் சந்தை காலை 6 முதல் மதியம் 12 மணி வரை செயல்படும். அதேபோல மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் செயல்படும்” என்றார்.
இதையும் படிங்க: விவசாய பொருள்கள் கொள்முதல் செய்வதற்கான தடை நீக்கம்