ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் குருநாத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாத, வழிமுறைகளைப் பின்பற்றாத கடைகள், நிறுவனங்கள் வாகனங்களில் செல்பவர்களுக்கு அபராதம் விதித்தார்.
அதன்படி இன்று மாநகரில் ஸ்டோனி பிரிட்ஜ், கருங்கல்பாளையம், மரப்பாலம் நால்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வுசெய்தார். ஆய்வில் 19 நபர்களை ஏற்றிச்சென்ற ஷேர் ஆட்டோவை பறிமுதல்செய்து ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.
மேலும் ஆணையர் 19 பயணிகளை வாகனத்திலிருந்து இறங்கச் சொல்லி வேறு வாகனத்தில் செல்லுமாறு அறிவுறுத்தினார். இது தொடர்ந்து குருநாத் தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றவும் முகக்கவசம் அணிந்துகொண்டு பயணிக்கவும் வலியுறுத்தினார்.
அதன்படி இன்று மட்டும் 50 கடைகள், வர்த்தக நிறுவனங்களுக்கு 500 முதல் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவிவரும் நிலையில் அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளைப் பின்பற்றாத நிறுவனங்கள், வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்துவருவது ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் புதிய உச்சம்: இந்தியாவில் மேலும் 1.45 லட்சம் பேருக்கு கரோனா