ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் புதிதாக கூடுதல் பள்ளிக் கட்டடம், ஆய்வகத்திற்கு இன்று (செப்.,13) அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் ஆகியோா் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர். பின்னர் இருவரும் இணைந்து பூமி பூஜையுடன் கட்டட பணிகளை தொடங்கி வைத்தனர்.
இந்த புதிய கட்டடத்தில் நான்கு வகுப்பறைகளும், இரண்டு ஆய்வக அறைகள் அமைக்கப்படும். இந்த விழாவில் திமுக முன்னாள் அமைச்சர் என்கேபி ராஜாவும் கலந்து கொண்டார். அதிமுக அரசு விழாவில் பங்கேற்ற என்கேபி ராஜாவுக்கு அமைச்சர் கேசி.கருப்பணன் சந்தனமாலை அணிவித்து வரவேற்றார்.
தமிழ்நாட்டில் திமுக 2006ஆம் ஆண்டிலிருந்து 2011ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாடு ஜவுளித்துறை அமைச்சராகவும் ஈரோடு மாவட்ட செயலாளராகவும் என்கேபி ராஜா இருந்தார். இந்நிலையில் தற்போது இவர் அமைச்சர்கள் விழாவில் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவினரிடையே ஏற்பட்ட பிளவு காரணமாக என்கேபி ராஜாவுக்கு எவ்வித பொறுப்புகளும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'தமிழ்நாட்டில் அதிமுகவை அசைக்க முடியாது' - அமைச்சர் செங்கோட்டையன்