கோபிசெட்டிபாளையம் அருகே தடப்பள்ளி பாசன வாய்க்காலில் சுமார் ரூ.2 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் குடிமராமத்துப் பணியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பொதுத்தேர்வுக்கு முன்பாக 15 நாள்கள் பயிற்சி அளித்துவிட்டு தேர்வு தொடங்க வேண்டும் என்ற வழக்குத்தாக்கல் செய்யப்பட்டதற்கும், நீதியரசர் தீர்ப்புக்கும் வித்தியாசம் உள்ளது. மேலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது தவிர தீர்ப்பு கூறவில்லை.
அதுபோல 10ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு எழுத மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். மேலும் 210 நாள்கள் பள்ளி செயல்பட்டால் மட்டுமே முழுமையான பாடத்திட்டம் நடத்தப்படும். தற்போது பள்ளிகள் குறைந்த நாள்களில் செயல்படுவதால், அதற்கேற்ப பாடங்கள் குறைப்பது குறித்து மட்டுமே, அலுவலர்கள் 14 பேரும் கல்வியாளர்கள் 4 பேரும் என 18 பேர் கொண்ட உயர் மட்டக்குழு ஆய்வு செய்து வருகின்றது' என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், 'பள்ளித் திறப்பது குறித்து 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து தேர்வு முடிவுகள் வெளியான பிறகே, பெற்றோர்களை அழைத்து பள்ளித் திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும்.
மேலும் அத்திக்கடவு அவிநாசித் திட்டம் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது' எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் கலந்துகொண்டார்.
இதையும் படிங்க: தனியார் பள்ளிகள் மீது இந்திய மாணவர் சங்கத்தினர் புகார்!