ஈரோடு கொல்லம்பாளையம் அருகேயுள்ள லோகநாதபுரத்தில் லாரி ஓட்டுநர் ஒருவர் தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். இவர் பணிக்குச் செல்லும்போது தனது மகளை அதே பகுதியிலுள்ள சகோதரி வீட்டில் பாதுகாப்புக்காக விட்டுச் செல்வது வழக்கம்.
இந்த நிலையில் வழக்கம்போல் கடந்த 19ஆம் தேதி அதிகாலை தனது மகளை சகோதரியின் வீட்டில் விட்டு விட்டு வேலைக்கு சென்றுள்ளார். இதனிடையே அதே பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி ஆறுமுகம் என்பவர், மாணவிக்கு ஆசைவார்த்தைக் கூறி அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு சித்ரவதை செய்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து வலியுடனும், ரத்தக்காயத்துடன் வீட்டிற்கு வந்த சிறுமியை அவரது அத்தை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது அவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. இத்தகவலறிந்த சிறுமியின் தந்தை, நடந்த சம்பவம் குறித்து ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்ட கட்டடத் தொழிலாளி ஆறுமுகத்திடம் நடத்திய விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: சமூகமே நோய்வாய் பட்டிருப்பதை காட்டும், குழந்தைகள் மீதான பாலியல் வக்கிரங்கள்!