ETV Bharat / state

ஆதரவற்றோருக்கு அன்னை தெரசாவாகத் திகழும் கணினி நிறுவன இயக்குநர் - tamil latest news

ஈரோடு: சென்னையில் இருக்கும் அமெரிக்கா கணினி நிறுவனத்தின் இயக்குநராகப் பணிபுரிந்துவரும் நயீம்கான் என்ற இளைஞர் 50 நாள்களாக 70-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோருக்கு மூன்று வேளை உணவும், தொழிற்பயிற்சியும் வழங்கிவருகிறார்.

உதவும் நயீம்கான்
உதவும் நயீம்கான்
author img

By

Published : May 28, 2020, 10:35 AM IST

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் நயீம்கான். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் பிரபல கணினி நிறுவனத்தில் கணினி பொறியாளராகப் பணிபுரிந்துவந்துள்ளார். பின்னர் அதே கணினி நிறுவனத்தின் சென்னை கிளையில் தற்போது இயக்குநராகப் பணியாற்றிவருகிறார்.

கரோனா பாதிப்பு ஊரடங்கு உத்தரவுக்கு முந்தைய நாள் தனது மனைவியைப் பார்க்க ஈரோடு வந்தவர் சாலையோரங்களில் உணவின்றித் தவித்துவந்தவர்களுக்கு ஆரம்பக் கட்டத்தில் ரொட்டி, பிஸ்கட் ஆகியவற்றை வழங்கிவந்துள்ளார்.

பின்னர் தனது வருவாயில் ஈட்டிய தொகை, தனது நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் வசூல்செய்த தொகையைக் கொண்டு நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு காலை, மதிய உணவை தேடிச்சென்று தனது நண்பர்களோடு இணைந்து வழங்கிவருகிறார்.

ஆதரவற்றோருடன் நயீம்கான்

இந்த நிலையில் தனியாக யாரும் ஆதரவற்றவர்கள் உள்பட எவருக்கும் உணவு வகைகளை வழங்கக் கூடாது என்று தடை போட்டதையடுத்து, சாலையோரங்களில் ஆதரவற்றிருந்த 70-க்கும் மேற்பட்டவர்களைத் திரட்டி ஈரோடு கொல்லம்பாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் தங்கவைத்து மாவட்ட நிர்வாகம், காவல் துறையினர் அனுமதியுடன் மூன்று வேளையும் உணவும், பொழுதுபோக்கு அம்சங்களையும் வழங்கிவருகிறார்.

இது குறித்து நயீம்கான் கூறியதாவது:

இதற்காக அமெரிக்கா, வெளிமாநிலங்கள் உள்பட பல்வேறு பகுதிகளிலும் எனது நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் வசூல்செய்த 22 லட்சம் ரூபாயைக் கொண்டு முகாமினை நடத்திவருகிறேன்.

70-க்கும் மேற்பட்டவர்கள் இருந்த நிலையில் கரோனா நோய் பாதிப்பு குறைந்து தளர்வு ஏற்பட்ட பிறகு கட்டட வேலை, தறிப்பட்டறை, உள்ளிட்ட பணிகளுக்கு இவர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மீதியுள்ள 53 நபர்களுக்கும் அவர்களுக்குப் பிடித்த வேலை கிடைத்ததும் அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.

உதவும் நயீம்கான்

இந்த ஊரடங்கு நேரத்தில் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உதவியுடன் ஆதரவற்றோருக்கு 60 நாட்கள் உதவிபுரிந்தது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கேரளாவில் தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு தேர்வுகள் தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.