ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நந்தா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் நந்தா சிபிஎஸ்சி பள்ளி, மெட்ரிக் பள்ளி, நந்தா பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, அறக்கட்டளையின் தலைவர் சண்முகனின் பண்ணை வீடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று பிற்பகல் (அக்டோபர் 28) முதல் சோதனை நடத்தினர்.
அப்போது, வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆவணங்களை கைபற்றியதாகவும், நந்தா அறக்கட்டளையின் தலைவர் சண்முகனிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் வருமான வரித்துறை அலுவலர்கள் கூறினர். மேலும், அறக்கட்டளையின் செயலாளர்களாக உள்ள சண்முகனின் மகன்கள் பிரதீப், திருமூர்த்தி அகியோரை பெருந்துறையில் உள்ள அறக்கட்டளையின் தலைமை அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதாகவும் கூறினர்.
வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், வருமான வரித்துறையினர் சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.