ETV Bharat / state

ரூ.13 லட்சம் மோசடி-திமுக நிர்வாகி மீது புகார் - புகார்

ஈரோடு: டெக்ஸ்டைல்ஸ் தொழிலில் கொடுக்க வேண்டிய ரூ.13 லட்சத்தை தராமல் மோசடி செய்ததாக திமுக நிர்வாகி மீது பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

money,issue,eroad,dmk
author img

By

Published : Aug 22, 2019, 7:21 PM IST

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், நந்தகுமார் ஆகிய இருவரும் சேர்ந்து வீரப்பன் சத்திரத்தில் A.K டெக்ஸ்டைல்ஸ் என்ற ஆடை உற்பத்தி நிறுவனத்தை நடத்திவருகின்றனர். இவர்களிடம் ஈரோடு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் கோட்டை பா.ராமு, அவரது நண்பர் ஆனந்த் ஆகிய இருவரும் தவணை முறையில் ஆடைகளை வாங்கிவந்துள்ளனர்.

முதல் தவணை தொகையை மட்டும் அளித்துள்ள நிலையில், அவர்கள் மீதமுள்ள ரூ.13 லட்சம் மதிப்புள்ள தவணை தொகையை அளிக்காமல் இருந்துள்ளனர். எனவே ராமுவின் வீட்டிற்கு சென்று கடனை கேட்ட கோவிந்தராஜூக்கு ராமுவும் அவரது நண்பர்களும் சேர்ந்து கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.

ரூ.13 லட்சத்தை தராமல் மோசடி செய்ததாக புகார்

இதனால் பணத்தை திரும்ப கேட்டால் கொலைமிரட்டல் விடுக்கின்றனர். எனவே ராமு மற்றும் அவரது நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோவிந்தராஜ், நந்தகுமார் ஆகிய இருவரும் ஈரோடு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.

Intro:ஈரோடு ஆனந்த்
ஆக.22

ரூ.15 லட்சம் மோசடி - திமுக நிர்வாகி மீது எஸ்.பி.யிடம் புகார்!

ஈரோடு: பொருள் வாங்கிவிட்டு ரூ.15 லட்சம் தராமல் மோசடி செய்ததாக திமுக நிர்வாகி மீது பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

Body:ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் மற்றும் நந்தகுமார். இவர்கள் இருவரும் வீரப்பன்சத்திரத்தில் A.K. டெக்ஸ்டைல்ஸ் என்ற காடாதுணி பேப்பரிக் உற்பத்தி செய்யும் நிறுவனம் நடத்தி வருகின்றனர். இவர்களிடம் ஈரோடு திமுகவின் மாநகர இளைஞர் அணி அமைப்பாளராக உள்ள கோட்டை பா.ராமு அவரது நண்பரான ஆனந்த் ஆகியோரும் கிரே கிளாத் வாங்கி விற்பனை செய்து வருவதாக கூறியுள்ளனர். மேலும் கோவிந்தராஜிடம் பல தவணைகளில் கிளாத் கொள்முதல் செய்துள்ளனர்.

மேலும் கொள்முதல் செய்யும் பொருளுக்கு 35 நாட்களுக்குள் பணம் தருவதாகவும் கூறி அதனடிப்படையில் முதல் தவணை வாங்கிய பொருளுக்கு ரூ.1,56,908-ஐ காசோலையாக கொடுத்துள்ளனர். பணமும் பெறப்பட்டது. அதன் பின்னர் பலமுறை பொருள் வாங்கியுள்ளனர் ஆனால் குறிப்பிட்ட தேதியில் பணம் தராததால் இதுகுறித்து ராமு மற்றும் ஆனந்திடம் கோவிந்தராஜ் கேட்டுள்ளார். அதற்கு நாங்கள் திமுகவில் பெரிய பொறுப்பில் இருக்கிறோம் என்று கூறியுள்ளனர்.

இதன் பிறகும் பணம் தராததால் ராமுவின் வீட்டிற்கு சென்று கேட்டபோது வீட்டிற்கே வந்து பணம் கேட்கும் அளவிற்கு தைரியம் வந்துவிட்டதா என்று மிரட்டியுள்ளார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

Conclusion:இதனையடுத்து தங்களை ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி கொலை மிரட்டல் விடுத்த ராமு மற்றும் அவரது நண்பர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் பணத்தை திரும்ப பெற்றுத்தரவும் பாதுகாப்பு கேட்டும் காவல்துறை கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.