ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அயலூர் சன்னகுழிமேட்டில், ஆடுகளைத் திருடிய கல்லூரி மாணவரைக் கிராம மக்கள் விரட்டி பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாகசன்னகுழிமேட்டை அடித்து உதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அயலூர் சேர்ந்த தங்கவேல் மகன் நாச்சிமுத்து என்பவர் நேற்று (டிச.10) மேய்ச்சலுக்குப் பின் தனது ஆடு, மாடுகளை வீட்டின் முன்பு கட்டி வைத்து விட்டுச் சாப்பிடுவதற்காகச் சென்று உள்ளார்.
அப்போது ஆடுகள் சத்தத்தைக் கேட்டு வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் ஆடுகளைத் திருடிக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார் அவரது மனைவி, கௌரி. இதைக் கண்டு அவர் கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் அவர்களில் ஒருவரை விரட்டி பிடிக்கவே மற்றொருவர் தப்பியோடினார். பிடிபட்டவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து அங்கிருந்தவர்கள் சரமாரியாகத் தாக்கினர்.
இது குறித்துத் தகவலறிந்த சிறுவலூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த இளைஞரை மீட்டதோடு, காவல்நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், அந்த இருவரும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் என்பது தெரிய வந்தது.
கொடிவேரி அணை அருகே கொளப்பலூரிக்கு வந்த இவ்விருவரும் தங்களது இருசக்கர வாகனத்தில் மதுபோதையில் சாகசம் செய்தபோது, நிலைத்தடுமாறி கீழே விழுந்து இருசக்கர வாகனம் நொறுங்கியது. அதனை சரி செய்ய பணம் வேண்டும் என்பதால், இந்த ஆடு திருட்டு சம்பவத்தில் இருவரும் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் தப்பியோடிய மற்றொரு நபரையும் பிடித்த போலீசார் இருவரிடமும் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிறையில் மரணமடைந்த அரியலூர் விவசாயி வழக்கு: சிபிஐக்கு மாற்றப்படுமா?