ETV Bharat / state

வாட்டிவதைக்க வருகிறது வெயில், குளிருக்கு ஸ்வெட்டர் வழங்கும் பள்ளிக் கல்வித் துறை! - கல்வியாளர்கள் கண்டனம்

ஈரோடு: கோடைகாலம் தொடங்கும் நிலையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படவேண்டிய ஸ்வெட்டர் தாமதமாக வந்ததால் மலைக்கிராம மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காலதாமதமாக மலை கிராம பள்ளிகளுக்கு குளிர்கால் ஸ்வெட்டர் வழங்கிய-பள்ளிக்கல்வித்துறை
காலதாமதமாக மலை கிராம பள்ளிகளுக்கு குளிர்கால் ஸ்வெட்டர் வழங்கிய-பள்ளிக்கல்வித்துறை
author img

By

Published : Jan 31, 2020, 12:16 PM IST

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடி, கடம்பூர், பர்கூர் மலைப்பகுதிகளில் அதிக குளிர் நிலவும் என்பதால் மலைக்கிராமங்களில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவ மாணவியருக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஸ்வெட்டர்கள் வழங்கப்பட்டுவருகின்றன.

இந்த ஸ்வெட்டர்கள் நவம்பர் மாத இறுதி அல்லது டிசம்பர் மாத தொடக்கத்தில் குளிர்காலம் தொடங்கும்போது மாணவர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். இந்தக் கல்வியாண்டில் தற்போது குளிர்காலம் முடியும் நிலையில் இன்னும் மாணவ மாணவியருக்கு ஸ்வெட்டர்கள் வழங்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் இன்று சத்தியமங்கலம், தாளவாடி வட்டாரக் கல்வி அலுவலகங்களுக்கு ஸ்வெட்டர்கள் லாரிகளில் கொண்டுவந்து இறக்கப்பட்டுள்ளன. இன்னும் 20 நாள்களில் குளிர்காலம் முடிவடையும் நிலையில் இந்த ஆண்டு தாமதமாக ஸ்வெட்டர்கள் வந்து சேர்ந்ததால் பள்ளி மாணவர்களுக்கு இனிமேல் ஸ்வெட்டர்கள் வழங்கியும் பயனில்லை என மலைக்கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் கேட்பதற்காக தொலைபேசியில் தொடர்புகொண்டபோது ஸ்வெட்டர் சம்பந்தமான கேள்விக்கு பதிலளிக்க மறுத்தனர்.

காலதாமதமாக மலைக்கிராம பள்ளிகளுக்கு ஸ்வெட்டர் வழங்கிய பள்ளிக் கல்வித் துறை

ஈரோடு மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களின் மெத்தனப்போக்கால் மலைக்கிராம மக்களுக்கு வழங்கப்படவேண்டிய ஸ்வெட்டர்கள் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது கண்டனத்திற்குரியது எனக் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இனிவரும் காலங்களில் குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே ஸ்வெட்டர்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைக்கிராமங்களில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க :நாசா செல்ல தகுதிப் பெற்ற மாணவிக்கு உதவி செய்யப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

Intro:Body:tn_erd_02_sathy_sweater_vis_tn10009

கோடை காலம் துவக்கும் நிலையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படவேண்டிய குளிர்கால ஸ்வெட்டர் லோடு தாமதமாக வந்ததால் மலை கிராம மாணவர்கள் அதிர்ச்சி

கோடை காலம் துவங்கி குளிர்காலம் முடியும் நிலையில் காலதாமதமாக கம்பளி வந்துள்ளதால் மலைக்கிராமமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடி, கடம்பூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதிகளில் அதிக குளிர் நிலவும் என்பதால் மலைகிராமங்களில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவ மாணவியருக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஸ்வெட்டர்கள் வழங்கப்படுகிறது. இந்த ஸ்வெட்டர்கள் நவம்பர் மாத இறுதி அல்லது டிசம்பர் மாத தொடக்கத்தில் குளிர்காலம் தொடங்கும்போது மாணவர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். இந்த கல்வியாண்டில் தற்போது குளிர்காலம் முடியும் நிலையில் இன்னும் மாணவ மாணவியருக்கு ஸ்வெட்டர்கள் வழங்கப்படவில்லை. இந்நிலையில் இன்று சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி வட்டார கல்வி அலுவலகங்களுக்கு ஸ்வெட்டர்கள் லாரிகளில் கொண்டு வந்து இறக்கப்பட்டுள்ளது. இன்னும் 20 நாட்களில் குளிர்காலம் முடிவடையும் நிலையில் இந்த ஆண்டு தாமதமாக ஸ்வெட்டர்கள் வந்து சேர்ந்ததால் பள்ளி மாணவர்களுக்கு இனிமேல் ஸ்வெட்டர்கள் வழங்கியும் பயனில்லை என மலைகிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுகுறித்து வட்டார கல்வி அலுவலர்களிடம் கேட்பதற்காக தொலைபேசியில் தொடர்புகொண்டபோது பள்ளி ஆய்வில் இருப்பதாக கூறி ஸ்வெட்டர் சம்பந்தமான கேள்விக்கு பதிலளிக்க மறுத்தனர். ஈரோடு மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் மலைகிராம மக்களுக்கு வழங்கப்படவேண்டிய ஸ்வெட்டர்கள் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது கண்டனத்திற்குரியது என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். இனிவரும் காலங்களில் குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே ஸ்வெட்டர்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலை கிராமங்களில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.