ஈரோட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் பழனிசாமி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சிறு, குறு, நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட மகளிர் சுய உதவிக் குழுவினருடன் கலந்தாய்வு நடத்தினார். அப்போது, தொழில்துறையினர் மற்றும் விவசாயிகளின் கேள்விகளுக்கு முதலமைச்சர் பதிலளித்தார்.
அதில், மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மட்டும் தான் கரோனா பரிசோதனை அதிகமாக நடத்தப்பட்டு வருகிறது. இதனால், நோய் பாதிப்படைந்தவர்களை ஆரம்ப நிலையில் கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பான சிகிச்சையளிக்கப்பட்டு விரைவில் குணமாகி வருகின்றனர். கரோனாவால் ஏறத்தாழ ஒரு லட்சத்து 56 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 67 ஆயிரம் பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இறப்பு விகிதமும் பிற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் குறைவாக உள்ளது. இந்த கரோனா நேரத்தில் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை மீட்டெடுக்க மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனை தொழில் கூட்டமைப்பினர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: ரூ. 151.57 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்!