ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை அடுத்த நம்பியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், அப்பகுதி மக்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “திங்கட்கிழமை (ஆகஸ்ட் 3) முதல் தொலைக்காட்சி வாயிலாக கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து அரசு அட்டவணை வெளியிட உள்ளது. இந்த ஆண்டு இரண்டு லட்சம் மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கரோனா தாக்கம் குறைந்த பின்பே பள்ளி திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும். 12ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்களை வைத்தே கல்லூரிக்குச் செல்ல முடியும். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை முழு அறிக்கையும் பெற்ற பிறகு முதலமைச்சர் ஆலோசனை செய்து முடிவெடுப்பார்” என்றார்.
இதையும் படிங்க...புதிய கல்விக் கொள்கை: தமிழ்நாடு அரசுக்கு தகவல் வரவில்லை - அமைச்சர் செங்கோட்டையன்!