சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் முல்லை, மல்லிகைப்பூ அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. பனிக்காலத்தில் பூ வரத்து 1 டன்னாகவும் கோடை காலத்தில் பூவின் வரத்து 6 டன்னாகவும் அதிகரித்துள்ளது.
பூ விவசாயிகள் தங்களது தோட்டங்களில் விளையும் பூவைப் பறித்து சத்திமயமங்கலம் பூச்சந்தையில் நேரடியாக விற்பனை செய்கின்றனர். பூவின் வரத்து அதிகம் காரணமாக கடந்த வாரம் விலை சரிந்தது.
தற்போது சித்திரை கனி காரணமாக பூவின் தேவை அதிகரித்துள்ளதால் பூ வாங்க சிறு வியாபாரிகள், பெண்கள் கூட்டம் அலை மோதியது. இதனால் மல்லிகை கிலோ ரூ.225 லிருந்து 455-க்கும், முல்லை ரூ.340 லிருந்து 440-க்கும், செண்டுமல்லி ரூ.30 லிருந்து 45-க்கும், சம்பங்கி ரூ.25 லிருந்து ரூ.200-க்கும் விற்பனையானது.
பூவின் வரத்து அதிகமாக இருந்தபோதிலும் அதன் தேவை அதிகரித்துள்ளதால் பூ விலை இரு மடங்காக உயர்ந்தது. இங்கு கொள்முதல் செய்த பூ கர்நாடகா, கேரளாவுக்குத் தனி வேன் மூலம் அனுப்பப்பட்டது. சித்திரை கனிக்கு பின்னர் சுபமுகூர்த்த தினங்கள் இல்லாததால் எதிர்வரும் வாரத்தில் பூ விலை குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அம்பேத்கரின் வழி நின்று திமுக தன் கடமையை நிறைவேற்றும் - மு.க. ஸ்டாலின்