ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டத்திற்குட்பட்ட இரண்டு கிராமங்களில் 18 வயதிற்கு கீழ் உள்ள இரண்டு பெண் குழந்தைகளுக்கு குழந்தை திருமணம் நடைபெறுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து குழந்தை திருமணத்தை தடை செய்யும் குழுவைச் சேர்ந்த தீபக், ஜனநாயக மாதர் சங்க பொறுப்பாளர் மல்லிகா, சத்தியமங்கலம் பெண் காவலர் கோமளா, ரீடு தொண்டு நிறுவன கள ஒருங்கிணைப்பாளர் கவிதா ஆகியோர் குழந்தை திருமணம் நடக்கவிருந்த கிராமத்துக்கு சென்றனர்.
குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்
பெண் குழந்தையின் பெற்றோர்கள், உறவினர்களுக்கு குழந்தை திருமணம் செய்துவைப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து கவுன்சிலிங் கொடுத்து இந்தத் திருமணம் நடைபெறாமல் தடுத்துள்ளனர்.
மேலும், பெண் திருமணத்தை ஆதரிக்கும் மணமகன் வீட்டுக்கு சென்று குழந்தை திருமணம் சட்டப்படி தவறு என்றும் மீறினால் போக்சோ சட்டத்தில் மணமகன் கைது செய்யப்படுவார் என எச்சரித்தனர்.