ETV Bharat / state

நீரில் மூழ்கி 6 வயது சிறுவன் உயிரிழப்பு - erode news

ஈரோடு அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற ஆறு வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவன்  சிறுவன் உயிரிழப்பு  ஈரோடில் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவன்  ஈரோடு செய்திகள்  child dead by fell in well  child dead  erode child dead  erode child dead by fell in to well  erode news  erode latest news
உயிரிழப்பு
author img

By

Published : Aug 16, 2021, 6:40 AM IST

ஈரோடு: சோலார் அடுத்த நொச்சிகாட்டுவலசு பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன்-கிருஷ்ணவேணி தம்பதிக்கு கிஷார் (11), தர்ஷன் (6) என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் தர்ஷன் தனது நண்பர்களுடன் வீட்டிற்கு அருகே உள்ள விவசாய கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார்.

அப்போது கிணற்றினுள் சக நண்பர்கள் துள்ளிக் குதித்து விளையாடுவதைப் பார்த்த தர்ஷன், தனக்கு நீச்சல் தெரியாது என்பதை மறந்து கிணற்றில் இறங்கியுள்ளார். இந்நிலையில் கிணற்றில் குதித்த சிறிது நேரத்திலேயே சிறுவன் நீரில் மூழ்கியுள்ளார்.

இதனைக் கண்ட சிறுவனின் நண்பர்கள் அக்கம்பக்கத்தினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, நீரில் மூழ்கிய சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணி நேர தீவிர தேடுதலுக்குப் பிறகு தர்ஷனின் உடலை இறந்த நிலையில் மீட்டனர்.

இதையும் படிங்க: நண்பனை கொடூரமாக தாக்கிய இருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.