ETV Bharat / state

புஞ்சைபுளியம்பட்டி சந்தையில் ரூ. 2 கோடிக்கு கால்நடைகள் விற்பனை! - ஈரோடில் கால்நடை சந்தை

புஞ்சைபுளியம்பட்டி கால்நடை சந்தையில் இன்று (டிச. 2) சுமார் 1000க்கும் மேற்பட்ட கால்நடைகள், ரூ.2 கோடி அளவில் விற்பனையானது.

ஒரு நாள் மடுமே ரூ. 2 கோடிக்கு விற்பனையான கால்நடை

author img

By

Published : Dec 2, 2021, 10:43 PM IST

ஈரோடு: புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள கால்நடை சந்தையில் வாரந்தோறும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

தமிழ்நாட்டிலேயே பொள்ளாச்சிக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய சந்தையாக விளங்கும் புஞ்சைபுளியம்பட்டி கால்நடை சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டும்.

அதிகரித்த விற்பனை

இதனை பல்வேறு மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வாங்கிச் செல்வார்கள். இந்நிலையில் இன்று (டிச.2) புஞ்சைபுளியம்பட்டி கால்நடைச் சந்தைக்கு 50 எருமைகள், 650 கலப்பின மாடுகள், 300 ஜெர்சி மாடுகள், 90 வளர்ப்பு கன்றுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்க விவசாயிகள் சந்தையில் குவிந்தனர். எருமைகள் ரூ.16 ஆயிரம் முதல் ரூ.36 ஆயிரம் வரியும், கறுப்பு வெள்ளை மாடு ரூ.22 ஆயிரம் முதல் ரூ.48 ஆயிரம் ரூபாய், ஜெர்சி ரூ.23 ஆயிரம் முதல் ரூ.53 ஆயிரம், சிந்து ரூ.15 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம், நாட்டுமாடு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.76 ஆயிரம் வரை, வளர்ப்பு கன்றுகள் ரூ.6000 முதல் ரூ.15 ஆயிரம் ரூபாய் வரையும் விற்பனையானது.

சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட 1000க்கும் மேற்பட்ட மாடுகள் ரூபாய் இரண்டு கோடிக்கு விற்பனையானது. தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் தீவனத்துக்கு பிரச்சினை இருக்காது.

கறவை மாடுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு மாடுகளை வாங்கி செல்வதாகவும், கடந்த வாரத்தை விட இந்தவாரம் மாடுகளின் வரத்து அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: Nannilam: மூன்றாவது நடவுப் பணிகளைத் தொடங்கிய விவசாயிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.