ETV Bharat / state

கார் விபத்து: இருவர் காயம்!

author img

By

Published : Apr 4, 2021, 6:16 PM IST

ஈரோடு : வெள்ளாளபாளையம் பிரிவு அருகே கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில் பெண்கள் இருவர் காயமடைந்தனர். இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

வாகன சோதனையில் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதல்

ஈரோடு மாவட்டம் வெள்ளாளபாளையம் பிரிவு அருகே தேர்தல் பறக்கும் படையினர் சாலையில் சென்ற வாகனங்களை திடீர் திடீரென நிறுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது கவுந்தப்பாடியில் இருந்து வந்துகொண்டிருந்த காரை நிறுத்தும்படி சைகை செய்தனர். இதைத் தொடர்ந்து அதே வண்டியின் பின்புறம் வந்த காரையும் திடீரென காரை நிறுத்தும்படி சைகை செய்தனர்.

இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னே இருந்த காரின் மீது வேகமாக மோதியது. இதில் பின்புறம் வந்து இடித்த காரில் பயணித்த இரண்டு பெண்களுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, இருவரும் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

பின்னர் சேதமடைந்த காரின் ஓட்டுநர், சிறிதும் பொறுப்பின்றி வாகனத்தை திடீரென நிறுத்தக் கூறி காவலர்கள் சைகை காட்டியதே விபத்து ஏற்படக் காரணம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க : விழுப்புரம் தொகுதிகள் வலம்: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும், களநிலவரமும்...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.