சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த கார் புது வடவள்ளி அருகே சென்றபோது எதிரே வந்த கார் மீது மோதியது. இதில் இரு கார்களில் சென்ற பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் விபத்துக்குள்ளான ஒரு காரில் திடீரென என்ஜின் பகுதியில் இருந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், தீப்பிடித்து எரிந்த காரை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.
கார் விபத்தில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே திம்பம் மலைப் பாதையில் ஒரு கார் தீ பிடித்து எரிந்து விபத்துக்குள்ளான நிலையில் மீண்டும் சத்தியமங்கலம் அருகே இரு கார்கள் மோதி ஒரு கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : சாதிக் பாஷா திருவனந்தபுரம் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை