ETV Bharat / state

கார் மரத்தில் மோதல்: ஒருவர் உயிரிழப்பு - Car Accident in GopiChettipalayam

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொளப்பலூர் கல்லுமடைபுதூரில் கோவை நோக்கிச் சென்ற கார் சாலையோர மரத்தில் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கார் விபத்து
கார் விபத்து
author img

By

Published : Dec 27, 2019, 5:07 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த அந்தியூர் பகுதியைச் சேர்ந்த 75 வயது முதியவர் பழனிசாமி என்பவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தனது மகள் பூங்கொடியுடன் காரில் சென்றார்.

பொங்கியண்ணன் என்பவர் ஓட்டிச்செல்கையில் கார் கொளப்பலூர் கல்லுமடைப்புதூர் என்ற இடத்தில் எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளியமரத்தில் மோதியது.

அதனைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்துவந்து விபத்துக்குள்ளான காரில் இருந்தவர்களை மீட்க முயற்சித்தனர். ஆனால் காரின் முன்புற இருக்கையில் அமர்ந்து பயணம் மேற்கொண்ட பழனிசாமி சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் படுகாயங்களுடன் காருக்குள் சிக்கியிருந்த ஓட்டுநர் பொங்கியண்ணன், பூங்கொடி ஆகிய இருவரையும் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிறுவலூர் காவல் துறையினர் விபத்தில் உயிரிழந்த பழனிசாமியின் உடலை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்து விபத்து குறித்து விசாரித்துவருகின்றனர்.

Intro:Body:tn_erd_04_sathy_car_accident_vis_tn10009

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொளப்பளுர் கல்லுமடைபுதூரில் ப கோவையை நோக்கிச்சென்ற கார் சாலையோர மரத்தில் மோதிய விபத்தில் காரில் பயணம் மேற்கொண்ட பழனிச்சாமி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கார் ஓட்டுநர் மற்றும் உடன் பயணம் மேற்கொண்ட பெண் ஆகிய இருவர் படுகாயங்களுடன் கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த அந்தியூர் பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் பழனிச்சாமி என்பவர் தனது உடல் சிகிச்சைக்காக கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தனது மகள் பூங்கொடியுடன் காரில் சென்றார். காரை பொங்கியண்ணன் என்வர் ஓட்டிச்செல்கையில் கார் கொளப்பலூர் கல்லுமடைப்புதூர் என்ற இடத்தில் எதிர்பாராது விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளியமரத்தில் அதிவேகமாக மோதியுள்ளது. அதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்து விபத்துக்குள்ளான காரில் பயணம் மேற்கொண்வர்களை மீட்க முயற்சித்தனர். அதற்குள் காரின் முன்புற இருக்கையில் அமர்ந்து பயணம் மேற்கொண்ட பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து உயிரிழந்தார். மேலும் படுகாயங்களுடன் காரின் இடிபாடுகள்குள் சிக்கியிருந்த ஓட்டுநர் பொங்கியண்ணன் மற்றும் பூங்கொடி ஆகிய இருவரையும் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்கான கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். தகவல் பெற்று சம்பவ இடத்திற்கு வந்த சிறுவலூர் காவல்துறையினர் விபத்தில் உயிரிழந்த பழனிச்சாமின் உடலை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.