ETV Bharat / state

அமலாக்கத்துறை கையில் ஜிஎஸ்டி தகவல்கள்.. அச்சுறுத்தல் என வணிகர்கள் கண்டனம்.. - enforcement department

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அனைத்து வணிகர்கள் சங்கம் தொடங்குவதற்கான ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பங்கேற்றார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

vikaramaraja
விக்கிரமராஜா
author img

By

Published : Jul 12, 2023, 2:31 PM IST

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா பேட்டி

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அனைத்து வணிகர்கள் சங்கம் தொடங்குவதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா சங்கத்தின் கொடியை ஏற்றிவைத்து அதன் பின் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் அமலாக்கத்துறை ஜி.எஸ்.டி விசாரிக்கும் நிலை என்பது ஏற்படக்கூடாது.

ஜி.எஸ்.டி வரி விதிக்கும் போது வரி ஏய்ப்பு இருக்காது, அதே போன்று விலை வாசி உயராது, வியாபாரிகளுக்கு பாதுகாப்பு இருக்கும் என்று மத்திய அரசு கூறியது. இது வரை 102 முறை சட்டம் மாற்றப்பட்டது. அரசுதுறை அதிகாரிகளுக்கே அந்த சட்டத்தின் முழுமையான நடைமுறைகள் தெரியப்படவில்லை.

சாமானிய வியாபாரிகளை வாட்டி வதைக்க கூடிய வகையில் அதிகாரிகள் அச்சுறுத்தல் ஏற்படுத்துகிறார்கள். தற்போது அமாலக்கத்துறை கையில் கொடுக்கப்பட்டு அதை விசாரிப்பார்கள் என்ற செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அந்த நிலை ஏற்பட கூடாது. அந்த நிலையை அரசு கொண்டு வந்தால் வணிகர் சங்கம் பேரமைப்பு எதிர்த்து நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுவதை தவித்து வேறு வழி இல்லை.

இதையும் படிங்க: Video:'காசு.. பணம்... துட்டு... மணி.. மணி' - வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கப்படும் காட்சி!

மேலும், டெல்லியில் அனைத்து மாநில நிர்வாகிகள் கூட்டம் இம்மாத இறுதியில் நடைபெற இருக்கிறது. ஜி.எஸ்.டி என்ற அடிப்படையில் அமலாக்கத்துறையிடம் முழு அதிகாரத்தை வழங்கினால் சாமானிய வணிகர்கள் வெளியேறும் நிலை ஏற்படும். ஆகவே மத்திய, மாநில அரசுகள் கட்டாயமாக அதற்கு இடம் கொடுக்க கூடாது என கூறினார்.

மேலும், கடைகளுக்கு மின்சார கட்டண உயர்வு என்பது சாமானிய மக்களையும் பாதிக்கும். மின்கட்டண உயர்வின் மூலம் விலைவாசியும் உயரும் இதனால் முதல்வர் இதனை திரும்ப பெற வேண்டும்.

தமிழில் பெயர் பலகை வைக்க நிர்வாகிகளிடம் தெரிவித்து வருகின்றோம். இது சம்பந்தமாக சென்னையில் நடைபெற உள்ள மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் மாற்று மொழிகளில் உள்ள பெயர் பலகையை தமிழ் மொழியில் மாற்றுவது குறித்து தேதி அறிவிக்கப்படும். வேளாண் அதிகாரிகள் விவசாயிகள் இணைந்து கமிட்டி அமைக்க வேண்டும். இதன்மூலம் தான் விலைவாசி கட்டுப்படுத்த வேண்டும்.

இதையும் படிங்க: GST Council Meeting: புற்றுநோய் மருந்திற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் - அமைச்சர் தங்கம் தென்னரசு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.