ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் தெங்குமரஹாடா கிராமத்தில் ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தெங்குமரஹாடா கிராமத்துக்கு செல்லும் பாதையின் குறுக்கே மாயாற்றில் சில நாள்களாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கிராமத்துக்கும் வெளியே போக்குவரத்து வசதியும் துண்டிக்கப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிராமத்துக்கு முக்கிய போக்குவரத்தான பரிசல் பயணம் ரத்து செய்யப்பட்டதால், அத்தியாவசிய தேவைக்குக் கூட மக்கள் வெளியே செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயப் பொருள்கள் கொண்டுச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
மக்களின் அவசரத் தேவையை கருத்தில் கொண்டு பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதிலளிக்கையில், நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெங்குமரஹாடாவுக்கு பாலம் கட்டுவதற்கு பரிந்துரை கடிதம் எழுதியுள்ளதாகவும், விரைவில் பாலம் கட்டப்படும் எனவும் தெரிவித்தார்.