ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் செண்பகபுதூர் கிராமத்திற்கும் உத்தண்டியூர் கிராமத்திற்கும் இடையே அமைந்துள்ளது எல்.பி.பி. பாலம். 1955ஆம் ஆண்டு பவானிசாகர் அணை கட்டப்பட்டபோது விவசாயிகளுக்கு ஏதுவாக இந்தப் பாலம் கட்டப்பட்டது. அந்தப் பாலம் தற்போது வலுவிழந்து இடிந்துவிழும் நிலையில் உள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள், "60 கிராமங்களுக்கு பிரதான போக்குவரத்து பாலமான எல்.பி.பி. பாலம் கட்டப்பட்டு 60 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. அதனால் பராமரிப்பின்றி தற்போது வலுவிழந்து இடிந்துவிழும் நிலையில் உள்ளது.
அந்தப் பாலம் இடிந்தால், 30 கி.மீ. சுற்றிதான் 30 கிராம மக்கள், பள்ளிக் குழந்தைகள் செல்ல வேண்டியநிலைக்குத் தள்ளப்படுவார்கள். எனவே இந்தப் பாலத்தை உடனடியாக விரிவுப்படுத்தி புதிதாக கட்டித்தர வேண்டும்" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: திடீரென இடிந்து விழுந்த முக்கொம்பு வாய்க்கால் பால தடுப்புச்சுவர்