ETV Bharat / state

தேர்வுக்கு படிக்காததால் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்.. 9-ஆம் வகுப்பு மாணவி செய்த சம்பவம்! - வெடிகுண்டு

ஈரோடு ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

Bomb threatening
வெடிகுண்டு மிரட்டல்
author img

By

Published : Mar 11, 2023, 2:03 PM IST

ஈரோடு: சென்னையில் உள்ள காவல்துறை தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலையில் மர்ம நபர் ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய அந்த மர்ம நபர் ஈரோடு ரயில் நிலையம் மற்றும் ஈரோடு பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், அது இன்னும் சற்று நேரத்தில் வெடிக்கப் போவதாகவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இந்த நிகழ்வு குறித்து ஈரோடு எஸ்பி அலுவலகத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன் பிறகு உஷாரான போலீசார் உடனடியாக இன்று காலை ஈரோடு ரயில் நிலையத்திற்கு சோதனையிட சென்றனர். மேலும் இது குறித்து ஈரோடு ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின் வெடிகுண்டு தடுப்புப்பிரிவு போலீசாரும் ரயில் நிலையத்திற்கு வந்தனர். அவர்களுடன் கயல் என்ற மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. பின் ஈரோடு ரயில் நிலையம் நுழைவாயில் பகுதி முதல், ஒவ்வொரு பகுதியாக சல்லடை போட்டு போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர்.

அதைத்தொடர்ந்து பயணிகளின் உடைமைகளும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஈரோடு ரயில் நிலையத்தில் உள்ள ஒவ்வொரு நடைமேடையிலும், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். ரயில் நிலையத்தில் உள்ள கடைகள், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம், குப்பைத் தொட்டிகள், ரயில்வே பணிமனை பகுதி என ஒரு இடம் விடாமல் ஒவ்வொரு பகுதியாக தீவிரமாக சோதனை செய்தனர்.

Bomb threatening
ஈரோட்டில் வெடிகுண்டு மிரட்டல்

சுமார் ஒரு மணி நேரம் சோதனை செய்த பின்னர் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. அதே சமயத்தில் நகர காவல் நிலைய ஆய்வாளர் தெய்வராணி தலைமையில், போலீசார் ஈரோடு பேருந்து நிலையத்திலும் சோதனையில் ஈடுபட்டனர். பேருந்து நிலையத்தில் உள்ள ஒவ்வொரு ரேக்குகளையும் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவிக்கொண்டு சோதனை செய்தனர்.

மேலும் மோப்ப நாய் கயலும் வரவழைக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியாக சோதனை செய்தது. பேருந்து நிலையத்தின் அனைத்து நடைமேடைகள், கடைகள், தனித்தனியாக ஒவ்வொரு பேருந்துகள் என அனைத்து இடங்களிலும், சுமார் ஒரு மணி நேரமாக சோதனை நடந்தது. இதிலும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. ஆகவே அந்த மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்துள்ளது. எனவே வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், வேலூர் காட்பாடி அருகே காந்திநகர் பகுதியில் இயங்கி வரும் ஜெயின் பள்ளியில் நாளை காலை வெடிகுண்டு வெடிக்கும் என சென்னையில் சென்னையில் உள்ள காவல்துறை தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. உடனடியாக கட்டுப்பாட்டு அறை போலீசார் வெடிகுண்டு மிரட்டல் குறித்து வேலூர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர் அந்த தகவல் யார் கொடுத்தது என அறிந்து கொள்ள, வேலூர் தெற்கு காவல் நிலைய போலீசார் சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட அந்த செல்போன் எண்ணை வைத்து அதிரடி விசாரணை செய்ததில், அந்த எண் வேலூர் பழைய டவுன் பகுதியில் உள்ள வள்ளலார் தெருவில் காண்பித்துள்ளது. மேலும் காட்பாடி போலீசார் மற்றும் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலியக்க செய்யும் (BDDS) குழுவினர் காட்பாடி ஜெயின் பள்ளிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டதில் வெடிகுண்டு ஏதும் இல்லை என தெரியவந்தது. அதன் பின் அங்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை செய்ததில், ஒரு திடுக்கிடும் உண்மை அம்பலமானது.

Bomb threatening
வெடிகுண்டு மிரட்டல்: பள்ளியில் சோதனை

காட்பாடி கழிஞ்சூர் பகுதியில் உள்ள ஜெயின் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி நாளை நடைபெறவிருக்கும் புவியியல் தேர்விற்கு படிக்காத காரணத்தால், தேர்வு பயத்தில் அவருடைய பாட்டியின் தொலைபேசியை எடுத்து அவசர எண் 100க்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிய வந்துள்ளது. தேர்வுக்கு முறையாக படிக்காமல், தேர்ச்சி பெற மாட்டோமோ என பயந்து கொண்டு ஒன்பதாம் வகுப்பு மாணவி தான் படிக்கும் பள்ளியில் வெடிகுண்டு இருக்கிறது என மிரட்டல் விடுத்தது காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது போன்ற காவல்துறையின் அவர எண் 100 என்பது மக்களின் அவசர பிரச்னைகாக 24*7 உழைக்கும் ஒரு குழுவாகும். அதை இவ்வாறு புரளியை கிளப்புவதற்காகவோ அல்லது தனது சொந்த தேவைக்கு தவறாகவோ பயன்படுத்தக் கூடாது என காவல்துறை தரப்பில் கோட்டு கொள்ளப்பட்டுள்ளது. மீறி காவல்துறையை அலைக்கழித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஷார்ஜாவில் இருந்து நூதன முறையில் தங்கம் கடத்தல்.. கோவையில் குருவி சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.