ETV Bharat / state

பவானி டிஎஸ்பிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்! - பவானி டிஎஸ்பி

ஈரோடு : வழக்கறிஞரை தாக்கிய பவானி காவல் துறை துணைக் கண்காணிப்பாளருக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தியும், பவானி காவல் நிலையத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடைபெற்றது.

erode black flag protest
erode black flag protest
author img

By

Published : Dec 28, 2019, 10:21 PM IST

ஈரோடு மாவட்டம், பவானியில் உள்ள அந்தியூர் பிரிவில் குறிப்பிட்ட ஒரு சமூகத்துக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் பாவடி நிலத்தில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிலர் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த பாவடி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யாமல் கற்கலை ஊன்றி அச்சமூகத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்நிலையில், பாவடி நிலத்தில் நெடுஞ்சாலை துறைக்கும் இடம் உள்ளது என்று கூறி, கடந்த 23ஆம் தேதி காவல் துறையினர் மூலமாக பாவடி நிலத்தில் சாலையை ஒட்டியுள்ள கற்களை மட்டும் நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றியுள்ளனர். இதனையடுத்து, பிரச்னைக்குரிய பாவடி நிலத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு அந்த சமூகத்தினர் நேற்று இரவு மேற்கூரை அமைக்க சென்றுள்ளனர்.

இதனைத் தடுத்த பவானி காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் சேகருக்கும், கோயிலுக்கு மேற்கூரை அமைக்க வந்த சமூகத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேற்கூரை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதால் காவல் துணைக் கண்காணிப்பாளரை அந்த சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் உதயசங்கர் என்பவர் தனது செல்ஃபோனில் வீடியோ பதிவு செய்தியுள்ளார். இதனைக் கண்ட துணைக் கண்காணிப்பாளர் செல்ஃபோனைப் பறித்ததுடன் அந்த நபரை தாக்கியதாகக் கூறப்படுகின்றது.

பவானி டிஎஸ்பிக்கு எதிராக நடந்த போராட்டம்

இந்நிலையில், வழக்கறிஞரை தாக்கியதுடன் அவர் மீது பொய்யாக வழக்குப்பதிவு செய்துள்ளதாகக் கூறி 50-க்கும் மேற்பட்டோர் பிரச்னைக்குரிய பாவடி நிலத்தில் கருப்புக் கொடியை கட்டியும் கையில் கருப்புக் கொடியை ஏந்தியும் ஊர்வலமாக சென்று பவானி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

மேலும், தமிழ்நாடு அரசு மாவட்டம் முழுவதும் உள்ள நெசவாளர்கள் பயன்படுத்திவந்த பாவடி நிலங்கள் அவர்களுக்குச் சொந்தம் என்று அரசாணை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி, அடுத்த மாதம் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த காவல் துறை கூடுதல் துணை கண்காணிப்பாளர் சார்லஸ் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், பிரச்னை குறித்து விரைவில் தீர்வு காணப்படும் என சமாதானம் செய்து அச்சமூகத்தினரை அங்கிருந்து அனுப்பி வைத்தார்.

இதையும் படிங்க : முப்படை தலைமைத் தளபதி பதவி சாதகமா? பாதகமா?

Intro:ஈரோடு ஆனந்த்
டிச28

பவானி டிஎஸ்பிக்கு எதிராக குறிப்பிட்ட சமூகத்தினர் கருப்பு கொடி ஏந்தி போராட்டம்!

பவானியில் குறிப்பிட்ட ஒரு சமூகத்திக்கு சொந்தமானதாக கூறப்படும் பாவடி நிலத்தில் உள்ள கோயிலில் மேற்கூரை அமைக்க முயன்ற போது காவல்துணை கண்காணிப்பாளர் தடுத்து நிறுத்தி பொய் வழக்கு போட்டதாக குற்றம்சாட்டி பிரச்சனைக்கு உரிய பாவடி நிலத்தில் கருப்பு கொடி கட்டிய சமூகத்தினர் கையில் கருப்பு கொடியை ஏந்தி ஊர்வலமாக சென்று பவானி காவல் நிலையத்தை முற்றுகையிட்டதுடன் காவல்துணை கண்காணிப்பாளர் சேகர் மீது புகார் அளித்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள அந்தியூர் பரிவில் குறிப்பிட்ட ஒரு சமூகத்துக்கு சொந்தமானதாக கூறப்படும் பாவடி நிலத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிலர் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாக கூறி பாவடி நிலத்தில் கற்கலை ஊன்றி ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்நிலையில் பாவடி நிலத்தில் நெடுஞ்சாலை துறைக்கும் இடம் உள்ளது என்று கூறி கடந்த 23-ம் தேதி அன்று காவல்துறையினர் மூலமாக பாவடி நிலத்தில் சாலையை ஒட்டியுள்ள கற்கலை மட்டும் நெடுஞ்சாலை துறையினர் அகற்றியுள்ளனர். இதனையடுத்து பிரச்சனைக்கு உரிய பாவடி நிலத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு அந்த சமூகத்தினர் நேற்று இரவு மேற்கூரை அமைக்க சென்றுள்ளனர்.

இதனை தடுத்த பவானி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சேகருக்கும் கோயிலுக்கு மேற்கூரை அமைக்க வந்த சமூகத்தினருக்கு வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. மேற்கூரை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதால் காவல் துணை கண்காணிப்பாளரை அந்த சமூகத்தை சேர்ந்த வழக்கறிஞர் உதயசங்கர் தனது செல் போனில் வீடியோ பதிவு செய்துள்ளார்.

இதனை கண்ட காவல்துணை கண்காணிப்பாளர் செல்போனை பறித்ததுடன் அந்த நபரை தாக்கியதாகவும் கூறப்படுகின்றது. வழக்கறிஞரை தாக்கியதுடன் அவர் மீது பொய்யாக வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறி 50-க்கும் மேற்பட்ட குறிப்பிட்ட சமூகத்தினர் பிரச்சனைக்கு உரிய பாவடி நிலத்தில் கருப்பு கொடியை கட்டியும் கையில் கருப்பு கொடியை ஏந்தி ஊர்வலமாக சென்று பவானி காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.

மேலும் தமிழக அரசு மாவட்டம் முழுவதும் உள்ள நெசவாளர்கள் பயன்படுத்தி வந்த பாவடி நிலங்கள் அவர்களுக்கு சொந்தம் என்று அரசாணை வெளியிட வேண்டும் என்று வருகின்ற ஜனவரி மாதம் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த போவதாகவும் கூறினர்.

Body:இதனை தொடர்ந்து அங்கு வந்த காவல்துறை கூடுதல் துணை கண்காணிப்பாளர் சார்லஸ் தலைமையில் பிரச்சனைக்கு உரிய இடத்தில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தியவர்களுடன் பவானி காவல்நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Conclusion:பிரச்சனைக்கு உரிய நிலத்தில் நேற்று இரவு மேற்கூரை அமைக்க சென்றது அதனை காவல்துணை கண்காணிப்பாளர் சேகர் தடுத்தி நிறுத்தியது வழக்கறிஞரின் செல் போனை பறித்ததுடன் அவர்கள் மீது உடனடியாக வழக்குபதிவு செய்வதாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் பவானி மக்களிடம் பரபரப்பாக பரவி வரும் நிலையில் இன்று பிரச்சனைக்கு உரிய நிலத்தில கருப்பு கொடியை கட்டியதுடன் ஊர்வலமாக சென்று பவானி காவல்நிலையத்தை முற்றுகையிட்டது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேட்டி : செல்வராஜ் - தலைவர் செங்குந்தர் மகாஜனம்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.